இரண்டாம் திருமணம், முதல் முறையாக கர்ப்பம் - கணவர் மற்றும் தோழிகளுடன் பார்ட்டி செய்து கொண்டாடிய SS music பூஜா.

By Rajkumar · 2/4/2023

இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியின் நிறைமாத கர்ப்பத்தை பார்ட்டி வைத்து துணிவு பட நடிகர் கொண்டாடி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அதிலும் சமீப காலமாகவே அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படங்கள் எல்லாம் பட்டைய கிளப்பி இருக்கிறது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

அஜித் திரைப்பயணம்:

இதனை அடுத்து அஜித் நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியார் நடித்து இருந்தார். இந்த படத்தையும் வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், இப்படத்துடன் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

துணிவு படம்:

இந்த படத்தில் இதுவரை கண்டிராத கெட்டப்பில் அஜித் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். மேலும், வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருந்தார். இந்த படத்தில் வங்கியின் உரிமையாளராக நடித்தவர் ஜான் கோகைன். இவர் ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த சர்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

ஜான் கோகைன் குறித்த தகவல்:

இதனை அடுத்து துணிவு படத்தில் ஜான் கோகைன் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பூஜா இராமச்சந்திரன் ஏற்கனவே ss music தொகுப்பாளர் கிரேக்கை திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஜான் கோகைன் பார்ட்டி வைத்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ஜான் கோகைன் மனைவி பூஜா ராமச்சந்திரன் அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். பின் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

வைரலாகும் பார்ட்டி புகைப்படம்:

அதுமட்டுமில்லாமல் கர்ப்பமாக இருக்கும் போது இவர் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் இவர்களுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. தற்போது பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் ஜான் அவர்கள் பார்ட்டி வைத்திருக்கிறார். இந்த பார்ட்டியில் ஜானுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர் பாரட்டியில் தன் மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full