காதலர் தினத்தை ஒட்டி வந்த 'பூக்கி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போது இவருடைய இசையில் உருவாகி இருக்கும் படம் பூக்கி. இந்த படத்தில் அஜய், தனுஷா, பாண்டியராஜன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ அஜய், ஹீரோயின் தனுஷா இருவருமே காதலிக்கிறார்கள். இருவரும் ஒரு காரில் சண்டை போட்டுக் கொண்டு போகிறார்கள். சில வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கும் போது தான் இருவருக்குமே சண்டை வருகிறது. இந்த சண்டையில் எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். அதை சில பேர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து விடுகிறார்கள்.
இதனால் இவர்கள் இருவரும் வைரலாகி விடுகிறார்கள். பின் அஜய், தனுஷா இருவருக்கும் பிரேக் அப் ஆகிறது. இந்த மன கவலையிலிருந்து வெளிவர இருவருமே சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மீகம் என பல வேலைகளை செய்கிறார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் இருவருடைய ஞாபகங்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் இது எதுவுமே வேண்டாம். இதற்கு பதில் திருமணம் தான் என்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்கிறார்கள்.
அதற்கு பிறகு என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தின் டைட்டில் பூக்கி இன்றைய தலைமுறைக்கு ஏற்ப இருக்கிறது. இயக்குனர் ஜென் சி ரசிகர்களை டார்கெட் செய்து படம் எடுத்திருக்கிறார். படம் முழுவதுமே இன்ஸ்ட்டா ரீல்ஸ் பார்ப்பது போல தான் இருக்கிறது.
காதலர்கள், காதலில் பிரேக் அப், பிரேக்கப்பில் இருந்து அவர்கள் வர செய்யும் விஷயங்கள் எல்லாம் இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.
அதே நேரத்தில் ஒரே ரியாக்ஷனில் படம் முழுக்க நடிப்பது பார்வையாளர் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. இருந்தாலும் சில காட்சிகள் அதை சமாதானம் செய்வது நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இந்த படத்தின் ஹீரோ அஜய், தனுஷா இருவருமே அறிமுகம். இருவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. படம் முழுவதும் இவர்களை சுற்றி நகர்கிறது. அதை முடிந்த அளவிற்கு போர் அடிக்காமல் கொண்டு செல்ல இயக்குனர் முயற்சி செய்து இருக்கிறார்.
காமெடி படத்தில் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. இந்த ஜென்சிக்கு ஏற்ற வகையில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது. எதிர்பார்ப்பு இல்லாமால் பார்க்கலாம். ஜென் சி ரசிகர்கள் தான் கொண்டாடுவார்கள்.
நிறை:
அஜய், தனுஷா நடிப்பு
இன்றைய காதல் கதை
ஒளிப்பதிவு எடிட்டிங் பின்னணி இசை ஓகே
வசனங்கள் நன்றாக இருக்கிறது
குறை:
படம் முழுக்க இன்ஸ்டா உணர்வு இருக்கிறது
பெரிதாக அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லை
இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
மொத்தத்தில் பூக்கி - ஜென் சி ரசிகர்கள் கொண்டாட்டம்