இரண்டு மாசம் என்னை ஹோட்டல்ல தங்க வச்சி - சீரியலால் அனுபவித்த கொடுமைகள் குறித்து பூவே உனக்காக சீரியல் நடிகை.

By Arun · 27/9/2023

பூவே உனக்காக சீரியல் இருந்து விலகியதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று மனம் திறந்து நடிகை ராதிகா பிரீத்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்ற சீரியல்களில் ஒன்றாக பூவே உனக்காக சீரியல் இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தார்கள்.

அதில் ஒரு நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிடா நடித்து இருந்தார். முதலில் சீரியலில் இருந்து ஜோவிடா விலகி இருந்தார். இதுகுறித்து அவர், தனது கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்தவர் அருண். இவரும் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

பூவே உனக்காக சீரியல்:

அவருக்கு பதிலாக விஜய் டிவி பிரபலம் அஸீம் கமிட் ஆகி இருந்தார். அசீம் வந்த பின்னர் இந்த சீரியல் Trpயில் எகிறியது. மேலும், இந்த தொடரில் பூவரசி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ராதிகா பிரீத்தி. இவரும் சீரியலில் பாதிலேயே வெளியேறி இருந்தார். இவருக்கு பதிலாக சன் டிவியின் அக்னி சீரியலில் நடித்த வர்ஷினி நடித்து இருந்தார். இப்படி சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் விலகி இருந்தாலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

சீரியல் குறித்த தகவல்:

ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை திடீரென இந்த சீரியலை முடித்து விட்டார்கள் . இது சீரியல் நடிகர்களுக்கே தெரியாமல் நடந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்தது விலகியது குறித்து நடிகை ராதிகா ப்ரீத்தி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், பூவே உனக்காக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன். முதலில் பேமெண்ட் சரியாகவே வராது. அதற்காக பலமுறை போராடினேன்.

நடிகை ராதிகா ப்ரீத்தி பேட்டி:

இன்னொரு பிரச்சனை நான் உடல் ரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டேன். அடிக்கடி உடம்பு முடியாமல் போனது. இரண்டு வருடம் என்னை ஹோட்டலில் தங்க வைத்து இருந்தார்கள். அங்கு ஹோட்டல் சாப்பாடு, புரொடக்ஷன் சாப்பாடு என்று மாத்தி மாத்தி சாப்பிட்டு எனக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது. இதனால் அடிக்கடி நான் ஹாஸ்பிடலுக்கும் சென்று கொண்டிருந்தேன். அது மட்டும் இல்லாமல் செட்டில் ஆண், பெண் இருவருக்குமே ஒரே கழிப்பறை தான்.

சீரியலில் விலக காரணம்:

இதனால் யூரின் இன்பெக்சன் எல்லாம் ஆனது. எனக்கு மட்டுமில்லை இது செட்டில் நிறைய பேருக்கு ஆனது. இப்படி பல பிரச்சனைகள் இருந்ததால் தான் நான் சீரியலை விட்டு விலகினேன் என்று கூறியிருந்தார். மேலும், நடிகை ராதிகா ப்ரீத்திக்கு சினிமா மீது ஆசை இருந்ததால் கல்லூரி படிக்கும்போதே போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பின் சில கன்னட படத்தில் நடித்து தமிழ் படம் ஒன்றில் நடித்தார். ஆனால், அந்த படம் வெளிவரவில்லை. அதற்கு பின் தான் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full