விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல. பூவே உனக்காக, ரோஜா என்று சினிமா டைட்டிலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் அருணும் நாயகியாக ராதிகா ப்ரீத்தி என்பவரும் நடித்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் பல சிரியல்களில் நடித்த அஸீம் கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலுக்கு வந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார் ராதிகா.

இதையும் பாருங்க : தர்பூசணி பழத்தை வைத்து மறைத்து படு மோசமான போஸ் – நிலா சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகையா இப்படி.

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள அவர், அப்பா ஒரு ராணுவ வீரர் அவருக்கு மீடியா என்றால் சுத்தமாக பிடிக்காது சின்ன வயதில் இருந்து நான் பார்த்தது இரண்டே படம்தான் எனக்கு சினிமா ஆசை இருந்ததால் கல்லூரி படிக்கும்போதே போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அது சரியான படமில்லை கம்பெனியும் சரியான கம்பெனி இல்லை இதனால் வீட்டில் என்னை கழுவி ஊற்றினார்கள். பலரும் என்னை ‘சினிமாவுக்குக் போறேன்னு கிளம்பிப் போன என்னாச்சு’ என்று கேலி செய்தார்கள்.

அந்த வைராக்கியத்துடன் நான் மீண்டும் படித்துக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினேன். அதன் பின்னர்தான் ஒரு கன்னட படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கன்னட படத்தில் நடித்த பின்னர் தமிழ் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படமும் என்னுடைய முதல் கன்னடப் படம் போல ஏமாற்றமாக போய்விட்டது. இப்படி ஒரு நிலையில் தான் எனக்கு இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது சினிமா கனவோடு இருந்து எனக்கு சீரியலில் நடிக்க சுத்தமாக பிடிக்கவில்லை.

Advertisement

ஆடிஷனில் கூட ஏடா குடமாக பதில் சொன்னா ரிஜக்ட் பண்ணிடுவாங்கன்னு வேண்டாத கேள்வியெல்லாம் கேட்டேன். ஆனால், நான் செலக்ட் ஆகிட்டேன். சீரியலுக்குள் வந்த பிறகுதான் இதனுடைய ரீச் புரியுது. ஆடிஷனுக்கு அம்மாதான் கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தாங்க. அன்னைக்கு மட்டும் அம்மா ‘சரி வரலைன்னா விடு’ன்னு சொல்லியிருந்தாங்கன்னா ‘பூவரசி’ இப்ப இங்க இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement