தனது மகள் சீரியலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் லிவிங்ஸ்டன். தமிழ் சினிமாவை பொருத்தவரை எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமா உலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களில் இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார்.

1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண்கள் வாரிசுகள் உள்ளனர்.நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் தன்னுடைய மூத்த மகள் சினிமா உலகிற்கு வரப் போகிறார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னரே பேட்டியில் கூறி இருந்தார்.

Advertisement

ஜோவிதா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் அந்த படத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்க இருந்தார்.இந்த படத்தின் பெயர் கலாசல். மேலும், இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, மதன் பாப், பானுசந்தர் என பலர்நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் மகளின் விலகல் குறித்து லிவிங்ஸ்டன் பேசுகையில், இந்த சீரியலில் இருந்து என் மகளை அனுப்பி விட்டதாக சிலர் கூறுகிறார்கள் அது நிஜம் கிடையாது அந்த சீரியலில் இருந்து விலகியது நாங்களாக எடுத்த முடிவு திடீரென்று விலகியதற்கான காரணம் தற்போது சொல்ல முடியாது. இதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நான் வெளியேறுகிறேன் என்று சீரியல் தரப்பிற்கு சொன்ன போது கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதன்படி டிசம்பர் 15-ம் தேதி வரைக்கும் டைம் தந்திருக்கோம் மேலும், அதே டிவியில நீங்க நடிச்சிட்டிருக்கீங்க. மகள் விலகறப்ப அது ஒருவித நெருடலை உருவாக்காதா என்று கேட்கப்ட்டதற்கு நான் நடிக்கறதையும் என் பொண்ணு வெளியேறுவதையும் ஒப்பிடத் தேவையில்லை. இது வேற, அது வேற.

Advertisement
Advertisement