எங்க கொண்டு போய் விட்டாலும் திரிஷா வீட்டுக்கு தான் போவேன்- பாகுபலி நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

By subhashini · 24/3/2024

எங்க விட்டாலும் திரிஷா வீட்டுக்கு தான் போவேன் என்று பாகுபலி நடிகர் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு மொழியில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ராணா டகுபதி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார். அதன் பின்னர் தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்தார்.

இருந்தாலும், ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்தின் மூலம் தான் ராணா உலகலவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர்கள். இந்த படத்தில் பிரபாஸ், அனுஸ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்னன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் மிஹீகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போதும் இவர் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

விருது விழாவில் ராணா:

இந்த நிலையில் திரிஷா குறித்து ராணா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஒரு விருது விழா ஒன்றில் ராணா கலந்திருந்தார். இந்த விருது விழாவை நடிகர் மிர்ச்சி சிவா தான் தொகுத்து வழங்கியிருந்தார். அப்போது அவர், சென்னையில் உங்களை தெரியாத ஒரு ஏரியாவில் கொண்டு போய் விட்டால், நீங்கள் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விடுவீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

ராணா சொன்ன பதில்:

அதற்கு ராணா, கண்டிப்பாக போய் விடுவேன். சென்னையில் என்னை எங்கு கொண்டு போய் விட்டாலும் ஒரே ஒரு நபரின் வீட்டுக்கு தான் நான் செல்வேன். நடிகை திரிஷா வீட்டு தான். சென்னையில் என்னை எங்கு விட்டாலும் நான் திரிஷா வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறி இருந்தார். தற்போது ரானா இப்படி பேசி இருந்த தகவல் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பலர், இருவரும் சேர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ராணா-திரிஷா உறவு:

காரணம், சில வருடங்களுக்கு முன் த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகையாக ராணாவுக்கும் இடையில் காதல் இருக்கிறது என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் செய்திகள் வந்தது. ஆனால், வழக்கம் போல இருவரும் நண்பர்கள் என்று சொல்லி வந்தனர். ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள் என்று இருவரும் ஜோடியாக தான் போவார்கள். பின் இந்தியில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராணாவிடம் திரிஷாவுடனான காதல் குறித்து கேட்கப்பட்டது, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் டேட்டிங் கூட சென்றிருக்கிறோம் ஆனால், சில பல காரணங்களால் எங்களுக்குள் உறவு நீடிக்கவில்லை என்று கூறி இருந்தார்.

திரிஷா குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாக கூறப்படுகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full