பிக் பாஸ் 9ல் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் போட்டியாளரா? யார்ன்னு தெரியுமா?

By subhashini · 24/9/2025

தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கும், பலரின் வாழ்க்கைக்கு துணையாகவும் இருக்கிறது. ‌இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

http://youtube.com/watch?v=Ysp9H8VLLrk

முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இவரின் பேச்சும் கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த எட்டாவது சீசனில் வீடு பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள். மேலும், முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார்.

பிக் பாஸ் 9:

இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசன் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது ராஜி, அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள். இதை அடுத்து கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி தொடர்பாக புரோமோ வீடியோவை இந்த டிவி வெளியிட்டு இருந்தது. இதை அடுத்து பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தொடர்பான டீசர் வெளியாகி இருந்தது. பின் அக்டோபர் மூன்றாம் தான் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று சுற்றிக் காட்ட இருக்கிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல்கள் சோசியல் மீடியாவில் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகவில்லை.

போட்டியாளர் அப்டேட்:

அதில் சீரியல் நடிகை அக்ஷிதா, அசோக், ஷபானா, நேஹா மேனன், நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன், நடிகர் பாலசரவணன், நடன இயக்குநர் சதீஸ், நடிகர் வினோத் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full