'BAD GIRL' படத்தால் விஜய் சேதுபதி மகளை திட்டிய நபர் - பொங்கி எழுந்த தயாரிப்பாளர்

By subhashini · 29/1/2025

விஜய் சேதுபதியின் குடும்பத்தை விமர்சித்த நபர்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் பதிலடிதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான மனிதர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது. மேலும், இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்து வெளியான படம் ‘மகாராஜா’. இவர் படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது. இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ஆகும்.

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இது விஜய் சேதுபதியின் உடைய ஐம்பதாவது படம். சமீபத்தில் கூட இந்த படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருந்தது. தமிழகத்தை தாண்டி சீனாவிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 என்ற படத்தில் நடித்து இருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை கொடுத்து இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது.

https://youtu.be/XJqyCjprzgc?si=jL8UU2NChHooIIKA

விஜய் சேதுபதி குறித்த தகவல்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின், இன்னும் சில படங்களில் விஜய் சேதுபதி கமிட்டாகி இருக்கிறார். இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார்.

விஜய் சேதுபதி குடும்பம் விமர்சனம்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் டைட்டில் பட்டதை முத்துக்குமரன் வென்று இருந்தார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பெற்றிருந்தார். இதை அடுத்து விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய படங்களில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பேட் கேர்ள் என்ற படத்தினுடைய டீசரை வெளியிட்டு இருந்தார்.

தயாரிப்பாளர் பதிவு:

இதற்கு சில நபர்கள் மோசமாக விஜய் சேதுபதியையும், அவருடைய மகளையும் மோசமாக திட்டி விமர்சித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஷ்வா, உங்களுக்கு டீசர் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி விமர்சனம் செய்ய உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், ஒருவரின் குடும்பத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full