போர் தொழில் இயக்குனர் அடுத்து இயக்கும் படத்தின் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தில் உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரியாக சரத்குமார் இருக்கிறார். இவர் ரொம்ப டெரரான ஆள். இவருடைய தலைமையின் கீழ் வேலை செய்பவர் தான் அசோக் செல்வன். ஆனால், அசோக் விளையாட்டுப் பிள்ளையாக அதிக புத்திசாலி கொண்ட இளைஞராக இருக்கிறார். இவர் புதிதாக போஸ்டிங் வாங்கி வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் திருச்சியை மையமாக வைத்து ஒரே மாதிரியான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

போர் தொழில் படம்:

இந்த கொலைகளில் எந்தவித தடயங்களும் இல்லாமல் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு அசோக் செல்வன்- சரத்குமார் இடம் வருகிறது. அசோக் வழக்கை கையில் எடுத்தவுடன் சரத்குமார் கடுமையாக போராடுகிறார். ஆனால், அசோக் செல்வன் விளையாட்டுத்தனமாக கடுப்பேற்றும்படி நடந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் சீரியல் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

படத்தின் கதை:

இன்னொரு பக்கம் போலீசுக்குள் இடையில் பாலிடிக்ஸ் நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி தொடர் கொலைகளை செய்யும் நபர்களை சரத்குமார் -அசோக் செல்வன் இணைந்து கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு பின்னணி என்ன? என்று சொல்வதே படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

விக்னேஷ் ராஜா பேட்டி:

நேற்று கூட இந்த படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா அளித்து இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, போர் தொழில் படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், போர் தொழில் கண்டிப்பாக சிறந்த படமாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

Advertisement

விக்னேஷ் ராஜா இயக்கும் அடுத்த படம்:

ஆனால், மக்கள் மத்தியில் இருந்து இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மீடியாவும் போர் தொழில் படத்தை கொண்டாடி வருகிறது. படம் பார்த்துவிட்டு பல பிரபலங்கள் என்னை தொடர்பு கொண்டு பேசியிருந்தார்கள். இந்த படத்தின் வெற்றி எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. அடுத்து நான் திரில்லர் படத்தை இயக்குகிறேன். அதுவும் புதுமையான கதையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement