தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரியாக லோகநாதன் இருக்கிறார். இவர் ரொம்ப டெரரான ஆள். இவருடைய தலைமையின் கீழ் வேலை செய்பவர் தான் பிரகாஷ். ஆனால், இவர் விளையாட்டுப் பிள்ளையாக அதிக புத்திசாலி கொண்ட இளைஞராக இருக்கிறார். இவர் புதிதாக போஸ்டிங் வாங்கி வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் திருச்சியை மையமாக வைத்து ஒரே மாதிரியான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இந்த கொலைகளில் எந்தவித தடயங்களும் இல்லாமல் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு அசோக் செல்வன்- சரத்குமார் இடம் வருகிறது. இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் சரத்குமார் கடுமையாக போராடுகிறார். ஆனால், அசோக் செல்வன் விளையாட்டுத்தனமாக கடுப்பேற்றும்படி நடந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் சீரியல் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இன்னொரு பக்கம் போலீசுக்குள் இடையில் பாலிடிக்சும் நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி தொடர் கொலைகளை செய்யும் நபர்களை சரத்குமார் -அசோக் செல்வன் இணைந்து கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு பின்னணி என்ன? என்று சொல்வதே படத்தின் மீதி கதை. படத்தில் லோகநாதன் கதாபாத்திரத்தில் சரத்குமார் மிரட்டி இருக்கிறார். போலீஸ் அதிகாரிக்குறிய கம்பீரத்தில் இருக்கிறார். பிரகாஷ் என்ற இளைஞன் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கிறார்.

Advertisement

இவர்கள் இருவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. விறுவிறுப்பான சைக்காலஜிக்கல் கில்லர் திரில்லர் பாணியில் படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ரொமான்டிக் காமெடி பாணியில் வந்த அசோக்செல்வனுக்கு இந்த படம் சற்று வித்தியாசமான கதாபாத்திரம். பேச தெரியாமல் உயர் அதிகாரியிடம் திட்டு வாங்கினாலும் தன்னுடைய வேலையில் சிறப்பாக செய்திருக்கிறார். அசோக் செல்வனின் திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். முதல் பாதி பொறுமையாக செல்வது போல் இருந்தாலும் ஆங்காங்கே வரும் சுவாரசியம் படத்தை பார்வையாளர்களின் கவனத்தை இழுத்து செல்கிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும், பின்னணிசையும் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. தேடப்படும் சீரியல் கில்லரை காண்பிக்கும் காட்சிகள் எல்லாம் அசத்தலாக இருக்கிறது.

இதற்கு முன் வெளிவந்த சீரியல் கில்லர் படங்களின் மீதி இருந்த குறைகளை கவனமாக கையாண்டு படத்தை நிவர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் வரும் வசனங்களும் பார்வையாளர்களை ஈர்த்து இருக்கிறது. மொத்தத்தில் சீரியல் கில்லர் சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து என்று சொல்லலாம்.

நிறை:

அசோக் செல்வன்- சரத்குமார் நடிப்பு சிறப்பு

பின்னணிசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் காட்சிகள்

சீரியல் கில்லர் கதைக்களம்

இயக்குனர் கதைகளத்தை கொண்டு சென்ற விதம் சிறப்பு

இரண்டாம் பாதி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது

குறை:

முதல் பாதி மெதுவாக செல்கிறது

தேவையில்லாத சில காட்சிகள் இருக்கிறது

மொத்தத்தில் போர் தொழில்- ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடையும்

Advertisement