நீங்களே அல்லாவின் ஆசீர்வாதத்தை பெற்று சொர்கத்துக்கு போங்க, என்ன விற்றுங்க - ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்ட வைரல் பெண் சஹீமா

By Arun · 15/10/2023

த்தைலத்தில் திடீரென்று பல பேர் பிரபலமடைந்துவிடுகின்றனர். அதிலும் ட்ரோல் மற்றும் மீம்ஸ் மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதிலும் இன்ஸ்டா ரீல்ஸ் வந்ததில் இருந்தே ஏராளமானோர் பிரபலமாகி இருக்கிறார்கள். மாதம் எதாவது ஓரிரண்டு விஷயங்கள் ட்ரெண்டிங்கில் வந்தால் அதை ஒரு வாரம் முதல் ஒரு மாசம் வரை ட்ரெண்டு செய்து விடுகிறார்கள் நெட்டிசன்கள். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இறைவி படத்தில் வந்த எஸ் ஜே சூர்யா பாட்டுக்கு vibe செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட பெண் படு பிரபலமடைந்தார்.

View this post on Instagram

A post shared by Sameeha Mariam (@thatpotatoface5)

இறைவி திரைப்படத்தில் வரும் ‘கண்ண காட்டி சிரிச்சா’ பாடலுக்கு ஒரு இளம்பெண் தன் அறையில் நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவில் அந்த பெண்ணின் நடனத்தை கண்டு ரசித்த பலரும் இந்த மாதிரி vibe செய்யும் பெண் கிடைத்தால் அதிர்ஷ்ட்டம் தான் என்று புகழ்ந்து தள்ளினார். இதற்கு எல்லாம் மேலாக இந்த வீடியோவை பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பெண்ணை புகழ்ந்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில் இந்த படம் வெளியான போது கூட இந்த பாடல் இவ்வளவு வைரலாகவில்லை எனவும் அந்த பெண் ஒரு டான்ஸ் ஆடி வெளியிட்ட பின் அந்த பாடலை அனைவரும் கொண்டாடி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் டான்சரா என தெரியவில்லை, ஆனால் அவர் ஆடிய நடனம், புரோஃபெஷனல் டான்சர்களை விட அதிகம் ஈர்த்ததாக தெரிவித்தார். இதனை அந்த வைரல் பெண்ணும் தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் ஷேர் செய்தார்.

View this post on Instagram

A post shared by Sameeha Mariam (@thatpotatoface5)

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் தேடி சென்று பலரும் பாலோ செய்தார்கள். தற்போது அந்த பெண்ணை கிட்டத்தட்ட 5லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஆனால், இப்போது அவர் ட்ரெண்டான அளவு ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார் அந்த பெண். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

https://twitter.com/rameshlaus/status/1713036243632882063?s=48

சமீப காலமாக இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு நெகடிவ் கமெண்டுகள் தான் குவிகிறது.அதிலும் குறிப்பாக நீ ஒரு இஸ்லாம் பெண்ணாக இருந்து இப்படி செய்யலாமா ? அல்லா உன்னை நிச்சயம் மன்னிக்க மாட்டார் என்று பலர் கமண்ட் செய்தனர். இப்படி தொடர்ந்து தனக்கு வரும் கமண்டுகளால் பொறுமையை இழந்த சமீஹா மரியம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள அவர் 'முஸ்லிம் சகோதர சகோதரிகள் தொடர்ந்து என்னை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீங்களே ஒரு சிறந்த இஸ்லாமியராக இருந்து கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்று சொர்க்கத்துக்கு செல்லுங்களேன், யார் உங்களை தடுக்கிறார்கள். ஆனால் என் வாழ்க்கையை நான் எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள். உங்கள் ஹிஜாப் எனக்கு தேவை இல்லை, நான் இப்படித்தான்.

https://twitter.com/jamesstanly/status/1713081361299542498?s=48

இந்த மதம் தான் அமைதியை பற்றி பேசுகிறது. நான் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் என்னை தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்னால் முடியவில்லை உங்களுக்கு எல்லாம் நான் என்ன செய்தேன் என்று வேதனையுடன் பேசி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது தொடர்ந்து பலரும் இவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர் இறைவி பட பாடலுக்கு நடனமாடி வைரலான வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full