புதிய கீதை பட நடிகையா இது ! இப்படி மாறிட்டாங்க - புகைப்படம் உள்ளே !

By Ajju · 22/4/2018
தமிழில் 2003 இல் வெளியான இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பனர். அதில் ஒருவர் நம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை மீரா ஜாஸ்மின் , மற்றொருவர் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல். 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி மும்பையில் பிறந்த இவர் தனது 5 வயதிலேயே பரத நாட்டிய கலையை கற்றுவந்தார்.தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் தனது தந்தையின் பள்ளி பருவ நண்பர் ஒருவர் மூலமாக கிடைத்த வாய்ப்பின் மூலம் 2000 வெளியான கஹோனா பியார் ஹாய் என்ற படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் தனது கல்லூரி படிப்பிற்காக அமெரிக்க செல்ல விரும்பியதால் அந்த படத்தில் நடிக்க மறுத்தவிட்டார். அதன் பின்னர் அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை கரீனா விற்கு வர அவரும் அந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். இதனால் அந்த வாய்ப்பு அமிஷா படேலுக்கு மீண்டும் கிடைத்தது. அந்த படத்திற்கு பின்னர் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பத்ரி என்ற ப்ளாக் பாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வசூல் சாதனை படைத்து 120 கோடியை வசூல் செய்தது. அதன் பின்னர் ஹிந்தி தெலுங்கு என பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் ஹிந்தியில் வெளியான சூப்பர் ஹிட் படங்களாக * ஏக் பிரேம் கத்தா * ஏ ஜிண்தகி கா சபர் * ஹம்ராஸ்...போன்ற பல ஹிட் படங்களில் நடித்ததோடு அதில் சில படங்களுக்காக சிறந்த நடிகை என்ற விருதனையும் பெற்றுள்ளார். ஆனால் தமிழில் புதிய கீதை படத்தில் மட்டுமே நடித்த இவர் அதன் பின்னர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது 43 வயதாகவும் அமிஷா படேல் ஹ்ரித்திக் ரோஷன் தொடங்கி இன்று வரை உள்ள பல முன்னணி ஹீரோகளுடனும் நடித்து விட்டார்.இந்த ஆண்டும் ஹிந்தியில் தேசி மேஜிக், பையாஜி சூப்பர் ஹிட் என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.
behindtalkies AMP · Quick view
View full