நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் போடப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சீனிவாசன். இவரை அனைவரும் செல்லமாக பவர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா என்ற படத்தை இயக்கி தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பவர்ஸ்டார் அவர்கள் கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா போன்ற பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

Advertisement

கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி என்ற படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் ஹீரோவாக ஒரு படத்தை இயக்கி நடித்து உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து இருக்கிறார்.

மேலும், அந்த படத்தின் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சை பொருளாகக் கூட பேசப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இவர் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இருந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் தீவிர சிகிச்சையும் பெற்று இருந்தார். இதற்கான வீடியோ, புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement

இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டாருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி நீதிமன்றம் பிடித்திருக்கும் சம்மன் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருக்கு 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக நடிகர் பவர் ஸ்டார் கூறியிருக்கிறார். அதனால் இதற்காக பவர் ஸ்டார் அவரிடம் இருந்து 14 லட்சம் வாங்கி இருக்கிறார். ஆனால், பவர் ஸ்டார் கடனாக வாங்கி தருவதாக சொல்லிய பணத்தையும் வாங்கி தரவில்லை.

Advertisement

அவரிடமிருந்து வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் முனுசாமி நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த வழக்கு குறித்து பலமுறை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இருந்தும் பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று பவர் ஸ்டார் சீனிவாசன் பல பேரை ஏமாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement