கன்னட மொழியின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் தற்போது மாரடைப்பால் உயிரிழந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவரை ரசிகர்கள் எல்லோரும் பவர்ஸ்டார் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். தமிழ் சினிமாவில் விஜய் எப்படியோ, அதே போல் கன்னட சினிமா உலகில் மிகப் பிரபலமானவர் புனித் ராஜ்குமார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். தற்போது இவர் ‘ஜேம்ஸ்’, ‘த்வித்வா’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமார் அவர்கள் அநியாயமாக உயிர் இழந்து உள்ளார். இன்று காலை புனித் ராஜ்குமார் அவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

மேலும், புனித் ராஜ்குமாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியான உடனே ரசிகர்கள் கடல் போல் மருத்துவமனையின் முன்பு குவியத் தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியா முழுவதும் புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்து வந்தார்கள். இவர்களுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த தகவல் அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று புனித ராஜ் உடல் நலம் குறித்து நலம் விசாரித்திருந்தார்.

மேலும், ஐசிவில் இருக்கும் புனித் ராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து இருந்தார்கள். இவருடைய உடல் நலம் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் தற்போது திடீரென்று புனித் ராஜ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவருக்கு 46 வயது தான் ஆகிறது. இவருடைய இறப்பு செய்தி கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய இறப்பிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் மருத்துவமனையிலேயே கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement