விஜய்க்கு நான் தான் எதிரி - தவெக உறுப்பினர் கேட்ட கேள்வியால் அந்தர் பல்டி அடித்த பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்
விஜய்யை விமர்சித்து பேசிய பவர் ஸ்டாரை தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் வறுத்தெடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் சமீபத்தில் சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவில் பெர்பியும் என்ற படத்தின் உடைய பூஜையில் பங்கேற்று இருந்தார். அப்போது பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், எனக்கும் விஜய்க்கு மேல கூட்டம் இருக்கிறது. நானும் கட்சி ஆரம்பிச்சேன். எம்.பி பதவிக்கு நின்றேன்.
அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ப்ரொடியூசர் கவுன்சில் தலைவர் பதவிக்கு நின்றார். நான் அவரை எதிர்த்து நின்றேன். இப்போது அவருடைய மகன் ஜோசப் விஜய்க்கு எதிராக நிற்க நான் தயாராக இருக்கிறேன். கட்சி எல்லாம் ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சி கூப்பிட்டால் அவர்கள் சார்பாக நான் விஜய்யை எதிர்த்து நிற்பேன். இல்லையென்றால் சுயேட்சையாக விஜய்யை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன். விஜய் அவருடைய கொள்கையை பற்றி பேசாமல் நான் அவருக்கு எதிரி, அவரை அழித்து விடுவேன் என்றெல்லாம் சொல்வது ரொம்ப தவறு.
பவர் ஸ்டார் சொன்னது:
ஸ்டாலின் சாரின் 50 ஆண்டுகால அனுபவம் விஜயினுடைய வயது. அதனால் மேடை இருக்கு, மக்கள் கூட்டம் இருக்கென்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் விஜய் பேசக்கூடாது. முதலில் விஜய் அரசியல் களத்துக்கு வரவேண்டும். விஜய் தான் என்னுடைய அரசியல் எதிரி. இப்படி எல்லாம் பேசியதால் தமிழக வெற்றிக் கழகத்தினர் என்னை மிரட்டமும் வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இருந்தார். இந்த நிலையில் மதுரை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர், பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு போனில் அழைத்து பேசி இருக்கும் ஆடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=pt8nlgrx_Ho
பவர் ஸ்டார் vs தவெக உறுப்பினர் உரையாடல்:
அதில் தவெக உறுப்பினர்: மதுரை வெற்றி கழகத்திலிருந்து பேசுறோம் என்று சொல்லியிருக்கிறார்.
பவர் ஸ்டார்: உடனே சொல்லுங்க தம்பி என்றார்.
தவெக உறுப்பினர்: விஜய் சார் எங்கு நின்றாலும் எதிர்த்துப் போட்டிடுவீங்களா? இது என்ன சார்? நீங்களும் திரைத்துறையில் தானே இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்
பவர் ஸ்டார்: கண்டிப்பாக தம்பி. அவர் என்னுடைய தம்பி தான். என் தம்பி கிட்ட பேச எனக்கு உரிமை இருக்கு. இன்னைக்கு நேத்து இல்லை, பத்து வருஷமாக விஜய் தம்பியை தெரியும் என்று சொன்னார்.
தவெக உறுப்பினர்: தம்பியை வரவேற்க வேண்டும் சார். என் அரசியல், அவரை எதிர்ப்பேன் என்றாலும் சொல்லுவது பெரிய வார்த்தை என்றார்.
பவர் ஸ்டார்: எதிரி எல்லாம் கிடையாது. நான் எதிரி இல்லை என்று தானே சொன்னேன். நான் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை என்று கூறினார்
தவெக உறுப்பினர்: திமுக வந்து விஜய்க்கு எதிரி. விஜய்க்கு நீங்கள் எதிரியா? என்று நிருபர் கேட்டதுமே அரசியல் ரீதியாக நான் எதிரி தானே என்று சொன்னிங்க சார், மறந்துவிட்டீர்களா? என்று கேட்கிறார்.
பவர் ஸ்டார்: சரி விடுங்க தம்பி. அதனால் என்ன, சொன்னதை கேளுங்கள் தம்பி. நம்மிடம் வாக்குவாதம் வேண்டாம். உங்களுக்கு தலைவர் எனக்கு தம்பி சரியா என்கிறார்.
தவெக உறுப்பினர்: சரிங்க சார் நன்றி என்று வைத்திருக்கிறார்.
விஜய் அரசியல்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது கடைசியாக விஜய் அவர்கள் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் முழு நேர அரசியல் ஈடுபாடு இருக்கிறார். கடந்த ஆண்டு தான் இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை அறிவித்திருந்தார். சமீபத்தில் தான் தன்னுடைய கட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழா நடத்தி இருந்தார். மும்முரமாக தற்போது விஜய் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.