பிரபு தேவாவின் 'ஜாலியா ஜிம்கானா' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 22/11/2024

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரபுதேவா திகழ்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகிருக்கும் படம் ஜாலியா ஜிம்கானா. இந்த படத்தில் அபிராமி, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் பவானியின் குடும்பம் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஆட்கள் ஏமாற்றுகிறார்கள். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவையும் அவர்கள் தாக்கி விடுகிறார்கள். இதனால் பவானியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், பவானியின் தாத்தா ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர்களால் கடையை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். உடனே தாத்தா, வழக்கறிஞர் பூங்குன்றனை சந்தித்து பிரச்சனையை சொல்ல சொல்கிறார். பவானி குடும்பமும் பூங்குன்றனின் உதவியை கேட்டு போகிறார்கள். ஆனால், அங்கு அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவருடைய உடலை மறைத்து வைக்க பவானி குடும்பம் முயற்சிக்கிறது.

அதற்கு பின்னால் நடக்கும் காமெடி கலாட்டா தான் படத்தின் மீதி கதை. படம் முழுவதுமே பிரபுதேவா சடலமாக நடித்திருக்கிறார். இது கொஞ்சம் வருத்தத்தை அளித்தாலும் தனக்கு கொடுத்த வேலையை கணக்கச்சிதமாக பிரபுதேவா செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தினுடைய ஆரம்பத்திலேயே இயக்குனர் லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் ஜாலியாக இருக்கும் என்று சொல்லிவிடுகிறார். ஆனால், படம் முழுக்கவே லாஜிக் மிஸ்டேக் தான் இருக்கிறது.

எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்று முதலிலேயே சொல்லிவிட்டார். சில இடங்களில் யோகி பாபுவின் காமெடிகள் ஒர்க் அவுட் ஆனாலும் சில இடங்களில் பெரிதாக கவரவில்லை. இவரை அடுத்து படத்தில் வரும் ஜான் விஜய், ரோபோ சங்கர், எம்எஸ் பாஸ்கர் எல்லோருமே சிரிக்க வைக்க ரொம்பவே மெனக்கட்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்லணும். குறிப்பாக, படத்தில் அபிராமியினுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

மடோனாவை விட அபிராமி தான் படத்தின் பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். அஸ்வின் விநாயகமூர்த்தியின் உடைய இசை நன்றாக இருக்கிறது. குறிப்பாக, போலீஸ்காரனா கட்டிக்கிட்டா பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. திரைக்கதை சளிப்படையை செய்தாலும் யோகி பாபுவினுடைய காமெடியும், அவர் கேட்கும் கேள்விகளும் நம்மை ஆறுதல் செய்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

பிரபுதேவாவின் நடிப்பு சிறப்பு

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:

படம் முழுவதுமே லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

கதைக்களம்

இயக்குனர் கதைக்களத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் ஜாலியா ஜிம்கானா- சிரிப்பலை

Tamil Behind Talkies AMP · Quick view
View full