'திரும்ப கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்கல' - தனது இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபு தேவா
தனது மனைவி மற்றும் மகள் குறித்து பிரபுதேவா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் 1995 ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்றும் மூன்று மகன்கள் பிறந்தனர். அதில் பிரபு தேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 ஆம் வயதில் 2008 ஆம் ஆண்டு காலமானார்.
அதன் பின்னர் பிரபுதேவா அவர்களுக்கு நடிகை நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது. பின், சில காரணங்களால் இவர்களும் பிரிந்தனர். அதன் பின் தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா தனியாக தான் வாழ்ந்து வந்தார். பிரபுதேவாவை பிரிந்த நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கோலாகலமாய் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது இந்த ஜோடிக்கு இரட்டைக் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் பிரபுதேவா அவர்களுக்கு மீண்டும் திருமணம் நடந்துள்ளது என்ற செய்திகள் பாலிவுட் வட்டாரத்தில் வெளியானது.
பிரபு தேவா குறித்து :
அதோடு பிரபுதேவாவிற்கு ஹிமானி சிங் என்னும் டாக்டர் உடன் இரண்டாம் திருமணம் முடிந்தது உண்மைதான் என்று அவரது சகோதரர் ராஜூ சுந்தரமும் கூறியிருந்தார். பின், அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற செய்திகளும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது மனைவி மற்றும் மகள் குறித்து பிரபுதேவா மனம் திறந்து உள்ளார். அதில், நான் 'ஹிமானி சிங்' ஐ எப்போது திருமணம் செய்து கொண்டேன் என்பது கூட யாருக்கும் தெரியாது. அவங்க ஒரு பிசியோதெரபிஸ்ட். கொரோனா டைம்ல நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
மனைவி குறித்து :
எனக்கு சூட்டிங் ஸ்பாட்டில் கையில ஏதோ சின்ன வலி இருந்தது, அப்போ பிசியோவா இவங்க வந்தாங்க. இவங்க பாம்பே பக்கத்துல போயசர் என்ற ஊரு. அப்போ நான் வாழ்க்கையில் மீண்டும் கல்யாணம் பண்ணுவேன் என்கிற ஒரு நினைப்பிலே இல்லை. அப்படியே நடந்து விட்டது. ஆனால், இன்னமும் கையில் எனக்கு அந்த வலி இருக்கிறது. இப்ப எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்கு ஒன்றரை வயது ஆகிறது. அவங்க பேரு ஷியா. சியா என்றால் லைட், நம்பிக்கை, சந்தோஷத்தை கொடுக்கிற ஒரு விஷயம் என்று நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. அந்தப் பெயரை நான் தான் வைத்தேன்.
மகள் குறித்து :
இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று. அது ஒரு மேஜிக் தான். இப்பவும் நான் யோசிப்பேன். எங்க வீட்ல எல்லாரும் பசங்க தான். எனக்கு இப்போ 51 வயசு ஆகுது. கல்யாணம் ஆகி, எல்லாம் போனதுக்கு அப்புறம், பின் நடந்த விஷயங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சு, மீண்டும் நான் திருமணம் செய்து எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது என்னால் நம்ப முடியவில்லை. அப்படியே போயிட்டு இருக்கு. ஏன் மகளுக்கு 15 வயது ஆகும்போது எனக்கு 65 வயது ஆகியிருக்கும். அந்த பொண்ணை பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதுசா இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=7argY6aX2WA
சந்தோஷமாக இருக்கிறேன் :
நான் என் நண்பர்களிடம் கூட சொல்லி இருக்கிறேன் 50 வயதில் ஒரு குழந்தை பெற்றுக்கொள், அது ஒரு தனி பீல் என்று. ஏனென்றால், அவள் எனக்கு இப்பதான் 25 வயது என்பது போல் ஒரு ஃபீல் கொடுக்கிறாள். நான் இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இதே மாதிரி என்னுடைய இரண்டு மகன்களும் எனக்கு ரொம்ப க்ளோஸ். ஒருத்தன் பேர் ரிஷி, இன்னொருத்தன் பேர் ஆதித். அவங்க ரெண்டு பேரும் எனக்கு பயங்கர க்ளோஸ் என்று சந்தோஷமாக பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.