மைனா படம் உருவான கதையை இயக்குனர் பிரபு சாலமன் பேசியது தான் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் , அமலா பால், சூசன், தம்பி ராமையா, பாஸ்கர் என பலர் நடிப்பில் வெளியான படம் தான் ‘மைனா’.தீபாவளி அன்று வெளியான இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58வது தென் இந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் கிடைத்தது.

தமிழ் திரைப்படத் துறையில் பிரபு சாலமன் ஒரு புகழ் பெற்ற இயக்குனாராவார் . தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி என்னும் இடத்தில் பிறந்த இவர் ‘காதல் கோட்டை’ திரைப்படத்திற்காக நான்கு தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் ‘அகத்தியன்’ அவர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

Advertisement

மைனா படம் குறித்து:

கண்ணோடு காண்பதெல்லாம், கிங்,கொக்கி, லீ, லாடம் போன்ற பல படங்களை இயக்கி இருந்தாலும் பிரபு சாலமனுக்கு ‘மைனா’ படம் தான் திருப்புமுனையாக இருந்தது. அதேசமயம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் கலைக்கி வரும் விதார்த் ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவுக்கு வருகை தந்தும் அசத்தினர்.

மேலும் ,குணச்சித்திர நடிகராக நடித்த தம்பி ராமையாவுக்கு அந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. எந்தவித எதிர்பார்க்கும் இல்லாமல் தீபாவளிக்கு வெளியான இப்படம் டி.இமான் இசைக்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இப்படி அனைவருக்கும் வாழ்வளித்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் தியேட்டர்களில் வெளியிட்டது.

Advertisement

மைனா உருவான கதை:

மேலும் இந்த படம் உருவானதை பற்றி பிரபு சாலமன் கூறுகையில், மைனா படம் பண்ணும் போது அவரிடம் வெறும் கேமரா மட்டும் தான் இருந்தது எனவும், அப்போது லைட்டிங் , டிராக் மற்றும் டிராலி வாடகைக்கு எடுக்கக்கூட அவரிடம் காசு இல்லை என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்திருந்த விதார்த், “டேய், வாடா என் படத்துல நீதான் ஹீரோ” என்று சொன்னதும் அவன் நம்பவே இல்லை என்றார்.

Advertisement

தொடர்ந்து அவர் கூறுகையில், ஹீரோயினாக ‘அமலா பால்’ தமிழில் அறிமுகமானார் எனவும் , வடிவேலு உடன் சின்ன கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த தம்பி ராமையாவை நடிக்க வைத்ததாகவும் கூறியிருந்தார். இப்படி ஆட்களை சேர்த்துக்கொண்டு 15 நண்பர்கள் டூர் போகிற மாதிரி தான் சூட்டிங்கிற்கு போனதாக தெரிவித்து இருந்தார். டிவி சீரியல் ஷூட்டிங் என்றால் கூட 60,70 பேர் இருப்பார்கள், ஆனால் நாங்கள் அதைவிட குறைவு தான் என்றும் தெரிவித்திருந்தார். இப்படி அனைவரும் உண்மையாக உழைத்ததால் படத்தின் பட்ஜெட் ரூபாய் 2 கோடியாக இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 14 கோடி வரை வசூலித்தது என்றார்.

Advertisement