பிரபு தேவாவின் 'பேட்ட ராப்' படம் பின்னி பெடல் எடுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 28/9/2024

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரபுதேவா திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பேட்ட ராப். இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஜே. சீனு இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வேதிகா, சன்னி லியோன், வையாபுரி, விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் பாலசுப்பிரமணியம் என்ற சிறுவன் நடிகர் பிரபுதேவா உடைய தீவிர ரசிகராக இருக்கிறார். இவர் காதலன் படத்தை பார்த்ததிலிருந்து பிரபுதேவாவின் மீது அதிக பற்று கொண்டு இருக்கிறார். பின் அந்த சிறுவன் வளர வளர பிரபுதேவாவை போலவே உடை, தோற்றம், நடனம், உடல் மொழி என அனைத்தையுமே மாற்றிக் கொள்கிறார். 11ம் வகுப்பு படிக்கும் போது இவரை ஜானகி என்ற பெண் காதலிக்கிறார். ஆனால், பாலசுப்ரமணியம் வேறொரு பெண்ணை விரும்புவதால் அவருடைய காதலை மறுக்கிறார்.

பின் பாலசுப்ரமணியன் வளர்ந்து கதாநாயகனாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாடகி வேதிகாவுக்கும் பிரபல தாதாவான காசிமேடு மைக்கலுக்கும் இடையே சண்டை உருவாகிறது. கொஞ்ச நேரத்திலேயே அதே மைக்கலுக்கும் பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே பிரச்சினை வருகிறது. இறுதியில் இருவரையுமே மைக்கல் துரத்துகிறார். இந்த பிரச்சனைகளை சமாளித்து பாலசுப்ரமணியன் ஹீரோ ஆனாரா? பாலசுப்ரமணியம், வேதிகாவிற்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் மீதி கதை.

இந்த முழு படத்தையும் பிரபுதேவாவே தங்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். வழக்கம்போல் இவர் நடனத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார், ஆக்சன் காட்சியும் மிரட்டி இருக்கிறார். சில இடங்களில் இவருடைய காமெடிகள் சிரிக்க வைக்கிறது. மொத்தத்தில் தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக காண்பித்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வேதிகா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

இவர்களுக்கு பின் வரும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் ஆகியோரும் காமெடி செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், சிரிப்பு தான் வரவில்லை. இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் வரும் ஜெய் பிரகாஷ், ரியாஸ்கான், மைம் கோபி, வையாபுரி என பல நடிகர்களுமே எதற்கு வந்தார்கள் என்று தெரியாத அளவிற்கு கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஓகே, பின்னணி இசை சுமார். மற்றபடி பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

ஆரம்பத்தில் கதை ஓகே என்றாலும் பின் எதை நோக்கி நகர்கிறது என்று சொல்லும் அளவிற்கு படம் சென்று கொண்டிருக்கின்றது. டான்ஸ் சண்டை காட்சி காமெடி என்று வரிசையாக மாற்றி மாற்றி இயக்குனர் காண்பித்தாலும் அதை தெளிவாகவும், அழுத்தமாகவும் காண்பிக்கவில்லை. பாட்டுக்குள் சண்டையா? சண்டைக்குள் பாட்டா? என்று பிரிக்க முடியாத அளவிற்கு காண்பித்திருக்கிறார். படத்தினுடைய ஹீரோவும் ஏற்கனவே ஹீரோவாக இருக்கும் பிரபுதேவாவும் ஒரே போல இருப்பது பார்வையாளுக்கே தெரியும்.

இதை எப்படி இயக்குனர் வித்தியாசமாக காண்பித்தார் என்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. கதாநாயகன் உடைய கதையைத்தான் இயக்குனர் இப்படி சொதப்பி வைத்திருக்கிறார். வேதிகா உடைய ரோல் மட்டும்தான் சீரிசாக இருக்கிறது. மற்றபடி அழுத்தமான ரோல் எதுவும் இயக்குனர் செல்லவில்லை. ஐடியாக நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் சொல்லும் விதத்தில் கோட்டை விட்டார். மொத்தத்தில் படத்தில் டான்ஸ், சண்டை காட்சி தவிர வேறு ஒன்றுமே இல்லை. பிரபுதேவா ரசிகர்கள் மட்டும் தான் பிடிக்கும்.

நிறை:

பிரபுதேவாவின் நடனம், சண்டை காட்சிகள் சிறப்பு

வேதிகா நடிப்பு அருமை

காமெடிகள், பின்னணி இசை சுமார்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

குறை:

கதைக்களம் சரியில்லை

இயக்குனர் அதை கொண்டு சென்ற விதத்திலும் கோட்டை விட்டார்

பாடல்கள் பெரிதாக கவர இல்லை

நடிகர்களுடைய கதாபாத்திரத்தை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

அரைத்த மாவை தான் திருப்பி திருப்பி அழைத்து இருக்கிறார்

படத்தில் சுவாரசியம், சஸ்பென்ஸ் எதுவுமே இல்லை

மொத்தத்தில் பேட்ட ராப்- ஆட்டம் குறைவு

behindtalkies AMP · Quick view
View full