சிவாஜி குடும்பத்தில் மருமகனாகும் மார்க் ஆண்டனி பட இயக்குனர் - பொண்ணு யார் தெரியுமா?

By subhashini · 28/11/2023

நடிகர் பிரபுவின் மகளுக்கு பிரபல இயக்குனர் உடன் திருமணம் நடைபெற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபு. இவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் தான். சிவாஜி நடிப்பை யாராலும் மறக்க முடியாது.

மேலும், ஆரம்பத்தில் பிரபு அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

பிரபு குறித்த தகவல்:

அதோடு தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இவருடைய நடிப்பில் வந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே இவர் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.

பிரபு மகள்:

இதில் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வந்த படங்கள் கூட நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு தான் திருமணம் நடைபெறுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபுவின் உறவினர் குணால் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணததிற்கு பிறகு ஐஸ்வர்யா, குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன்-ஐஸ்வர்யா திருமணம்:

பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதற்கு பின் ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர்கள் உடன் தான் வசித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவருமே காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களுடைய காதலை பிரபுவின் குடும்பம் ஏற்றுக்கொண்டது. மேலும், இவர்களுடைய திருமணம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்பயணம்:

தற்போது பிரபுவின் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் குடும்பமும் திருமண வேளைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று இருந்தது. இதை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய அடுத்த படத்தை தல அஜித்தை வைத்து இயக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full