ஹாலிவுட் படத்தில் இருந்து சுடப்பட்ட காமெடி - முதன் முறையாக பதில் அளித்த கோமாளி பட இயக்குனர்.

By Arun · 22/11/2022

காப்பி அடித்து கோமாளி படத்தில் வைக்கப்பட்ட காட்சி குறித்து பிரதீப் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதலில் குறும்படங்களை தான் இயக்கி இருந்தார். அதன் பின் இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

லவ் டுடே படம்:

காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதன் படி இருவரும் செல்போன்களை மாற்றி கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது.

https://www.youtube.com/watch?v=KI5_YjEZrhM

படத்தின் கதை:

இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரும் இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. மேலும், படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலினும் பேட்டி கொடுத்திருந்தார்.

பிரதீப் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் பிரதீப் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம், நீங்கள் காட்சியை இதுவரை காப்பி பண்ணி இருக்கிறீர்களா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு பிரதீப் ரங்கநாதன் கூறியது, காப்பி பண்ணி இருக்கிறேன். கோமாளி படத்தில் ஒரு காட்சி மட்டும் இங்கிலீஷ் படத்தில் இருந்து எடுத்து பண்ணேன். அது எவ்வளவு பெரிய தப்பு என்பதை புரிந்து கொண்டேன். அதற்காக என்னை பயங்கரமாக வச்சி செய்து இருந்தார்கள். ஏனென்றால், அந்த ஒரு காட்சியை காப்பியடித்ததற்கு படமே இப்படித்தான் இவன் செய்திருப்பான் என்று பலர் மனதிலும் தோன்றியிருக்கு.

கோமாளி படத்தில் காப்பி செய்த காட்சி:

என் நண்பரும் நீ இவ்வளவு சூப்பராக கதை எடுத்து அந்த ஒரு சீன் வைத்ததால் உன் மீதுள்ள மதிப்பு குறைந்து விடும் என்றெல்லாம் கூறினார்கள். அதற்கு பிறகு இனிமே காப்பியே அடிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன் என்று கூறியிருக்கிறார். இப்படி பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தில் காப்பி அடித்த காட்சி, ஜெயம்ரவி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது செம்மொழி குறித்து கூறுங்கள் என்று சொன்னவுடனே தேன்மொழி, கனிமொழி, இளமொழி என்று கூறுவார். அதை யோகி பாபு சொல்லுவார். அந்த காட்சி தான் ஆங்கில படத்திலிருந்து காப்பி செய்யப்பட்டது. தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full