பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படம் ஹிட் கொடுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 17/10/2025

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டியூட். இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜி, சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு துணையாக அவருடைய மாமா பொண்ணு மமிதாவும் அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இருவரும் ஒன்றாக வேலை செய்வதால் மமிதாவிற்கு பிரதீப் மீது காதல் வருகிறது. பிரதீப், மமிதா காதலை மறுக்கிறார். பின் மமிதா, சின்ன வயதில் இருந்தே நான் உன்னை தோழியாக தான் பார்க்கிறேன் என்று சொல்கிறார்.

இதனால் மனமுடைந்த மமிதா தன்னுடைய மேல் படிப்புக்காக வெளிநாடு சென்று விடுகிறார். பின் பிரதீப், மமிதாவை ரொம்பவே மிஸ் செய்கிறார். ஒரு கட்டத்தில் மமிதா மீது பிரதிப்பிற்கும் காதல் வந்துவிடுகிறது. பின் இதைப்பற்றி பிரதீப், மமிதாவின் அப்பா சரத்குமார் இடம் சொல்கிறார். சரத்குமார் ஒரு பெரிய அரசியல்வாதியாக இருக்கிறார். பின் பிரதீப்- மமிதா இருவரின் திருமண ஏற்பாடுகளை சரத்குமார் தடபுடலாக செய்து கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த அரசியல் பிரபலங்களுமே இந்த திருமணத்திற்கு வருகிறார்கள். அப்போது மமிதா, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று சொல்கிறார். உடனே உடனே பிரதீப், மமிதா ஆசைப்பட்டவர் உடன் சேர்த்து வைக்கவும் நினைக்கிறார். கடைசியில் மமிதா, தான் காதலித்த நபருடன் சேர்ந்தாரா? பிரதீப்- மமிதா சேர்ந்தார்களா? சரத்குமார் என்ன செய்தார்? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இந்த படம் பிரதீப் திரைப்படத்திற்கு ஒரு இன்னொரு சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். தலைப்பிற்கு ஏற்றவாரு படம் முழுக்க ரகளையாகவே இருக்கிறது. குறிப்பாக, தன்னுடைய முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வரும் பிரதீப் செய்யும் அலப்பறைகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கிறது. ஜென் சி தலைமுறையை மனதில் வைத்து இயக்குனர் கதையை கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். அதோடு இந்த 2025 காலகட்டத்திற்கு ஏற்ப ஜாதியின் கோர முகத்தை சைலன்டாக எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் அருமையாக இருக்கிறது.

நகைச்சுவை எல்லாம் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுடைய மேனரிஸனத்துக்கே ஒரு தனி ரசிகர் கூட்டம் இந்த படத்தின் மூலம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்த மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்கள். படத்தினுடைய முதல் பாதி சரவெடி பட்டாசு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கலாட்டா, நகைச்சுவை என்று சென்று கொண்டிருக்கிறது. முதல் பாதி ரொம்ப சுவாரசியமாக சென்றிருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் தான் சுவாரசியம் கொஞ்சம் குறைவு. டெக்னிக்கலாகவும் படம் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை பாடல்கள் எல்லாம் தெறிக்க விட்டிருக்கிறது. மொத்தத்தில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் இந்த தீபாவளிக்கு ட்ரீட் என்றே சொல்லலாம்.

நிறை:

பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு

கதைக்களம் அருமை

முதல் பாதி சூப்பர்

டெக்னிக்கல் விஷயங்கள் நன்றாக இருக்கிறது

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது.

குறை:

இரண்டாம் பாதியில் சுவாரசியம் குறைவு

கிளைமாக்ஸ் ஒரே இடத்தை சுற்றுவது போல இருக்கிறது

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் டியூட் - அதிரடி சரவெடி

Tamil Behind Talkies AMP · Quick view
View full