எனக்கு அது ஒரு விஷயமே கிடையாது, ஆனால் - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

By subhashini · 14/10/2025

தன்னை பற்றிய உருவ கேலிக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா மூலம் அறிமுகம் ஆகி இருந்தார். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கி நடித்து இருந்த ‘லவ் டுடே’ படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘டிராகன்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் அவர்கள் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டியூட். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் என்பவர் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

டியூட் படம்:

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜி, சரத்குமார், ரோகினி, டிராவிட் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதோடு இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தினுடைய வெளியிட்டு உரிமையை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமே பெற்று இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் பேட்டி:

தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்கள். அதில் பேசிய பிரதிப் ரங்கநாதன், டீயூட் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. எங்கள் எல்லோருக்குமே படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது. இது ரொம்ப ஜாலியான படம். எல்ஐகே, டியூட் ரெண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளி வராதது நல்லது தான்.

https://www.youtube.com/watch?v=JQbXFU98rg4

உருவ கேலிக்கு பதிலடி:

அப்படி வெளிவந்திருந்தால் ரெண்டு படங்களின் கலெக்ஷனுமே பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல் என்னை பற்றி நிறைய உருவ கேலிகள் வருகிறது. ஆனால், உருவ கேலி செய்வதெல்லாம் என்னை பெரிதாக பாதிக்காது. எனக்கு முன்னாடி மக்களுடைய அன்பு இருக்கும்போது நான் ஏன் உருவ கேலி பற்றி யோசிக்கணும். எதுவுமே எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் தான் நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படலாம். ஆனால், மக்கள் எனக்கு நிறைய அன்பு தந்திருக்கிறார்கள். அதனால் இது எனக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full