'இந்தக் கோணத்தில் நாங்க யோசிக்கல' - பத்திரிக்கையாளரின் ஏடாகூட கேள்விக்கு பிரதீப் கொடுத்த பதில்
'டிராகன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயங்கள்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் 'கோமாளி' படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் 'லவ் டுடே'.
இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள படம் 'டிராகன்'. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இப்படம் வருகின்ற 21 ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில், சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. அதன்பின் பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
டிராகன் படம்:
இந்த சந்திப்பில் பிரதீப் ரங்கநாதன், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. வருகின்ற 21ஆம் தேதி டிராகன் படம் வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் தனுஷ் நடித்து, இயக்கி மற்றும் தயாரித்துள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இது குறித்து பிரதீப் ரங்கநாதனிடம், தனுஷிற்கு போட்டியாக இப்படம் வெளியாக உள்ளதா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
https://www.youtube.com/shorts/Id8dF_-tW8U
தனுஷ் போட்டியில்லை:
அதற்கு பதில் அளித்த பிரதீப், முதலில் 'டிராகன்' படம் முன்பே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அஜித்தின் படம் ரிலீஸ் ஆனதால் இப்படத்தை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மேலும், இதே காரணத்திற்காக தான் தனுஷின் படமும் ரிலீஸ் தள்ளிப் போனதாக தான் கருதுவதாகவும் தெரிவித்தார். அதோடு ஒரே நேரத்தில் டிராகன் மற்றும் தனுஷின் படங்கள் ரிலீஸ் ஆவதை தான் போட்டியாக நினைக்கவில்லை என்றும் பிரதீப் கூறியுள்ளார். மேலும், இந்த இரு படங்களுமே காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
டிராகன் ட்ரெய்லர் ரிலீஸ்:
எனவே ரசிகர்கள் இந்த இரு படங்களுக்கும் எத்தகைய வரவேற்பை கொடுக்கிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த ட்ரெய்லரில் படத்தின் 10 சதவீத காட்சிகளே இடம் பெற்றுள்ளதாகவும், தியேட்டர் ஆடியன்ஸிற்காக அதிகமான சர்ப்ரைஸுகளை படத்தில் சேமித்து வைத்துள்ளதாகவும் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியிருந்தார். மேலும், பிரதீப் கடைசியாக இயக்கி நடித்த லவ் டுடே படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், அவரை வைத்து படம் இயக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது என இயக்குனர் அஸ்வத் அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.
அஸ்வத் மாரிமுத்து:
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக 'ஓ மை கடவுளே' என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருந்தார். இப்படத்தில் அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் நடித்திருந்தார்கள். மேலும், விஜய் சேதுபதி சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு இப்படத்தின் பாடல்கள் பயங்கரமாக ட்ரெண்ட் ஆகி இருந்தது. இதை அடுத்து இவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர் இயக்கியிருக்கும் 'டிராகன் திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.