பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? உற்சாகத்தில் ரசிகர்கள்
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு தான் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘லவ் டுடே’.
இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ராகன் படம்:
நேற்று வெளியான ட்ராகன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் டிராகன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, டிராகன் படம் வெளியாகி முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. உலக அளவில் இந்த படம் 7.5 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. லவ் டுடே படத்தினுடைய முதல் நாள் சாதனையை டிராகன் படம் முறியடித்து இருக்கிறது என்று தான் சொல்லணும்.
முதல் நாள் வசூல்:
காரணம், லவ் டுடே படம் ரிலீஸ் ஆனபோது முதல் நாள் ஆறு கோடி தான் வசூல் செய்தது. டிராகன் படம் அதைவிட 1.5 கோடி அதிகமாக வசூல் செய்திருப்பது படக்குழுவினர் மத்தியில் உற்சாகத்தை அளித்திருக்கிறது. இனிவரும் நாட்களிலும் டிராகன் படம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், 12ஆம் வகுப்பில் நன்றாக படித்து 96 சதவீதம் மதிப்பெண் எடுத்து மெரீட்டில் கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், இவர் பள்ளியில் நன்றாக படித்தும், நல்ல பையனாக இருந்துமே ஒரு பெண் இவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
படத்தின் கதை:
இதனால் கல்லூரியில் இவர் அடாவடி செய்யும் ரகளை பையனாக வலம் வருகிறார். 48 அரியர் வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கதாநாயகி அனுபமாவை காதலிக்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரி ப்ரொபசர் மிஸ்கினை எதிர்த்து இவர் நிறைய சேட்டைகள் எல்லாம் செய்கிறார். மேலும், இவருடன் படித்தவர்கள் எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். ஆனால், இவர் மட்டும்தான் பிக் பாஸ் பார்த்து வாழ்க்கை கழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அனுபமா இவருடைய காதலை பிரேக் அப் செய்து விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த பிரதீப், அனுபமா முன்னாடி நன்றாக வாழ வேண்டும் என்று போலி சர்டிபிகேட் தயார் செய்கிறார். இதன் மூலம் இவர் மூன்று லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்.
படம் குறித்த தகவல்:
வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகிறார். அப்போது ஒரு நாள் மிஸ்கின், பிரதீப் போலீஸ் சான்றிதழ் மூலம் தான் வேலைக்கு போனார் என்ற விஷயம் தெரியவந்தது. அதைப் பற்றி மிஸ்கின், பிரதீப்பிடம் கேட்கிறார். உடனே அவர், மிஸ்கின் காலில் விழுந்து எல்லாம் கெஞ்சுகிறார். உடனே மிஸ்கின், நீ 48 அரியரையும் இப்போது கிளியர் செய். உன்னுடைய தப்பை மன்னித்து விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் பிரதீப் என்ன செய்தார்? தன்னுடைய அரியரை எல்லாம் கிளியர் செய்தாரா? தன்னுடைய காதலில் ஜெயித்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.