நான் லவ் பண்ண பொண்ணோட கால் எப்பவும் என்கேஜாக இருக்கும், ஆனால் - பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்

By subhashini · 23/2/2025

தன்னுடைய காதல் தோல்வி குறித்து பிரதீப் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு தான் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘லவ் டுடே’.

இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ராகன் படம்:

சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூல் சாதனையும் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். இப்படி இருக்கும் நிலையில் டிராகன் படத்தின் ப்ரொமோஷனின் போது அளித்த பேட்டியில் பிரதீப் ரங்கநாதன், நான் ஸ்கூலில் லவ் பண்ணும் போது லேன் லைனில் தான் கால் பண்ணுவேன். அவர்களிடம் மொபைல் போன் இருக்கு. மொபைலில் இருந்து லேண்ட் லைனுக்கு கால் செய்தால் எங்கள் வீட்டில் யாராவது எடுப்பாங்க. அதனால் நான் கால் பண்ணும் போது மட்டும் தான் அவங்க பேச முடியும்.

https://www.youtube.com/watch?v=SztyrJcU7xU

பிரதீப் ரங்கநாதன் பேட்டி:

12-வது முடியும் நேரத்தில் நான் கால் பண்ணினேன். அப்போது ரொம்ப நேரமாக என்கேஜாக இருந்தது. அடுத்து ஒரு மணி நேரம் கழித்து அடிக்கும்போது என்கேஜராகவே இருந்தது. அடுத்து கொஞ்ச நேரம் கழித்து போன் செய்தேன். அவர் எடுத்து என் பக்கத்து வீட்டு பையன் கூட பேசிட்டு இருக்கேன் என்று சொன்னார். பக்கத்து வீட்டில் பையன் இருக்கானான்னு கேட்டேன். உடனே அவர், ஆமா என்று சொன்னாங்க. சரி ஓகேன்னு சொல்லி வைத்து விட்டேன். திரும்ப இரண்டு நாள் கழித்து கால் பண்ணேன். திரும்பவும் செல்போன் என்கேஜ் ஆகவே இருந்தது. சரி ஒரு அரை மணி நேரம் கழித்து போன் பண்ணுவோம் என்று போன் பண்ண மீண்டும் என்கேஜராகவே இருந்தது.

https://www.youtube.com/shorts/X3az0GYzrV0

காதலி செய்த வேலை:

திரும்ப 1 மணி நேரம் கழித்து போன் பண்ணேன். பிசியாக இருந்தது. திரும்பத் திரும்ப கால் செய்தேன். என்கேஜாகவே வந்தது. அடுத்த கால் செய்யும்போது எடுத்து பக்கத்து வீட்டு பையன் பாட்டு பாட சொல்லிக் கேட்டான் நான் பாடிட்டு இருந்தேன் என்று சொன்னார். அப்போது எனக்கு ஷாக்காகி நீ பாடுவியா என்று கேட்டேன். ஆமாம், நான் பாடுவேன் என்று சொன்னார். ரொம்ப என்கேஜாகவே இருக்க, என்ன நடக்குதுன்னு கேட்டேன். பின் ரெண்டு பேருக்குமே நிறைய சண்டை வந்தது.

காதல் தோல்வி:

அதற்குப்பின் கொஞ்ச நாள் கழித்து போன் செய்து, நான் தான் உன் பாய் ஃப்ரெண்ட். எனக்கு சப்போர்ட் பண்ணுவியா? இல்லை அவனுக்கு சப்போர்ட் பண்ணுவியான்னு கேட்டேன். உடனே அவங்க, ரெண்டு பேரும் எனக்கு முக்கியம் என்று சொன்னார். அப்போது நான், என்னைக்கு நான்தான் முக்கியம் என்று உனக்கு தோணுதோ அன்னைக்கு எனக்கு கால் பண்ணு என்று சொல்லி வைத்து விட்டேன். அதற்கு பிறகு அந்த பக்கம் இருந்து கால் வரவே இல்லை. திரும்பவும் நான் எவ்வளவு முயற்சி பண்ணேன். கால் வரவே இல்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full