“என்னை அந்த மாதிரி புகைப்படம் எடுத்தது” - வைரல் புகைப்படம் குறித்து பிரக்ஞானந்தாவின் தாயார் சொன்ன நெகிழ்ச்சி காரணம்.

By Dhilip Kumar · 25/8/2023

சில தினங்களுக்கு முன் இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அம்மா பிரக்ஞானந்தாவை ஆச்சிரியத்தில் பார்த்துகொண்டு இருந்தார் அந்த புகைப்படமானது இணையத்தில் பரவி வந்தது. இது குறித்து அவரது அம்மா தற்போது விளக்ம் ஒன்றை அளித்துள்ளார். அஜர்பைஜானில் நடைபெற்று வந்த  FIDE உலக சதுரங்க போட்டியானது உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்தவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் தற்போது நடைபெற்று வந்த உலக செஸ் தொடரில் இறுதிப்போட்டியில் கிரான்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

அவர் இதற்க்கு முன்னதாக உலக தரவரிசை பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா-வை அரையிறுதியில் வீழ்த்தி நேற்று மாலை 4 மணிக்கு மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் மோதினர் அந்த சுற்று ட்ராவில் முடிந்தது. இறுதிபோட்டியின் முதல் சுற்று நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில் அப்போட்டியனது மாலை 7 மணிக்கு 35 நகர்வுக்கு பின் இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தார்.

முதல் சுற்று சமனில் முடிந்ததால் 22 அன்று நடைபெற்ற 2 ஆம் சுற்றும் டிராவில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது.பிரக்னந்தா வெற்றி பெற வேண்டும் இந்திய முழுவதும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். 2022 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரராக மாறினார் பிரக்ஞானந்தா. 21 அன்று போட்டியில் வெள்ளை நிற காய்களை கொண்டு களமிறங்கிய பிரக்ஞானந்தா, 21 அன்று போட்டியில் சற்று முன்னிலையில் இருந்து வந்தார்.

35 வது நகர்வுக்கு பின் போட்டி கடினமாக்க விரும்பாத இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தனர். அதன் படி இன்று நடைபெற்ற டைபிரேக்கர் போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சன் தோல்வியை தழுவினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா கால்சென்னுக்கு சவால் கொடுத்தார். இருந்தும் போராடிய அவரால் முதல் சுற்றில் வெற்றி பெற முடியவில்லை. 2-வது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற, உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். 3-வது இடத்தை ஃபேபியானோ கருனா பிடித்தார்.

பிரக்ஞானந்தா அம்மா கூறியது:

என் மகன் அஜர்பைஜானில் நடைபெற்ற உலக கோப்பை கலந்து கொண்டார். காலிறுதி போட்டியில் விளையாடும் போது என்னை எப்போது போட்டோ எடுத்தார்கள் என்பதே எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த புகைப்படத்தை எல்லாரும் பார்த்துள்ளார்கள். அந்த நேரத்தில் நான் விளையாட்டில் தான் கவனம் செலுத்தி வந்தேன். காலிறுதி போட்டியில் அவன் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

https://twitter.com/news7tamil/status/1694953002925445625

பிரக்ஞானந்தா இந்த அளவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு. அதுமட்டும் அல்லாமல் அந்த  Tournament கலந்து கொள்ள அந்த வாய்ப்பு கிடைத்தது தான் மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்த சதுரங்க ஆட்டத்தில் அவன் இன்னும் நிறைய தூரங்கள் போக வேண்டும். இன்னும் நிறைய விளையாட வேண்டியது இருக்கிறது.என்றும் அவர் கூறியிருந்தார்.    

Tamil Behind Talkies AMP · Quick view
View full