அந்த படத்துல நடிக்க முதல்ல என்ன தான் அனுகினார் மோகன் ஜி, ஆனா நான் - பிரஜன் சொன்ன உண்மை.

By ·

வாழ்க்கை முதல் சினிமா வரை என்று ஜாலியாக நடிகர் பிரஜின் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பிரஜின். இவர் முதன் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அந்த சமயங்களில் பிரஜின் அனைவரின் மத்தியிலும் குறிப்பாக பெண்கள் மனதை கொள்ளையடித்தவர் என்றே சொல்லலாம். பின்னர் சினிமாவில் துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கினார்.

ஜீவா நடித்த டிஷ்யூம் திரைப்படம் தான் இவர் நடித்த முதல் படம். பின் திரைத்துறை வாய்ப்புகள் சரியான முறையில் அமையாத காரணத்தினால் பிரஜின் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். காதலிக்க நேரமில்லை என்ற விஜய் தொலைக்காட்சி சீரியல் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாகும் வாய்ப்புகளும் கிடைத்தது. இதையடுத்து பிரஜின் அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ப்ரஜின் திரைப்பயணம்:

ஆனால், எதிர்பார்த்தபடி வெற்றிகள் கிடைக்கவில்லை. மேலும், இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அதன்பிறகு இவர் சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர் நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்தார். மறுபடியும் விஜய் தொலைகாட்சியின் சின்னத்தம்பி சீரியலில் நாயகனாக நடித்தார் பிரஜின். அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கியது. பின் அன்புடன் குஷி என்ற சீரியலில் பிரஜின் நடித்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=L6L4Fa4FsgQ

ப்ரஜின் நடித்த டி3 படம்:

இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக இவர் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது பிரஜின் அவர்கள் ‘ D3’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சஸ்பெண்ஸ், திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பாலாஜி இயக்கி இருக்கிறார். பீமாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம்- ஜே கே எம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ப்ரஜின் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் ப்ரஜின் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், 20 வருடங்களுக்கு மேலாக நான் சினிமா துறையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் என்னுடைய உழைப்பை போட்டுக் கொண்டே தான் இருப்பேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடித்த டி3 படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. ஆங்கராக என்னுடைய வாழ்க்கை தொடங்கியது. அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் என்னை செதுக்கினேன். மேலும், நானும் இயக்குனர் மோகன் ஜி யும் நீண்ட கால நண்பர்கள்.

சினிமா குறித்து சொன்னது:

அவருடைய பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படம் இப்போது வெளிவந்திருந்தால் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டிருக்கும். அதே போல் அவர் இயக்கத்தில் வந்த திரௌபதி படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் அவர் என்னை தான் அணுகி இருந்தார். ஆனால், அந்த கதையில் எனக்கு சில கேள்விகள் இருந்தது. அதனால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை. இருந்தாலும், அவர்வெற்றி பெற்றார். சினிமாவில் என்னுடைய உழைப்பு சரியாக தான் இருக்கிறது. ஆனால், வெற்றி கிடைக்க தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full