ஓராண்டிற்கு பின்னர் தனது ட்வின்ஸ் குழந்தகளின் கியூட் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட பிரஜின்.

By Rajkumar · 1/4/2020

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா சமீபத்தில் சஞ்சீவ் - ஆல்யா மானஸா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து தற்போது ரியல் லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரபல சின்னத்திரை ஜோடிகளான பிரஜின்-சாண்ட்ரா.

https://www.instagram.com/p/B-Zr60jD3rn/

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் பிரபலமான பிரஜனை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்குகடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் பதிலளித்த சான்ட்ரா .

அதற்கு முக்கிய காரணமே நான் ஒரு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான். அது எங்கள் தோழி ஒருவரின் குழந்தை படுபாவிங்க அந்த கொழந்தையை எங்க குழந்தையா ஆகிட்டாங்க. அதே போல 10 வருடம் ஏன் குழந்தை பெத்துக்களனு கேக்குறாங்க என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், எங்களிடம் பல பேர் இது தான் உங்கள் முதல் குழந்தையா என்று கேட்கின்றனர்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் , “கண்ணுக்குள் , ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.   சென்ற ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வந்தார் இவரது கணவரான பிரஜின். விஜய் டிவி  சீரியல் ஹீரோவாக அவர் ரீ எண்ட்ரி தந்த 'சின்னத்தம்பி' தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சான்ட்ராவிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரஜின்-சான்ட்ரா தம்பதியினரின் அழகிய இரட்டை தேவதைகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். ஓராண்டு காலமாக தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதவிடாமல் இருந்த ப்ரஜின், தற்போது குழந்தைகள் இருவரும் பின்னால் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full