என் மகள்கள் பெரிதாக வளர்ந்துவிட்டார்கள் - தந்தையர் தனத்தில் தனது ட்வின்ஸ் மகள்களுடன் பிரஜின் பதிவிட்ட புகைப்படம்.

By Rajkumar · 20/6/2021

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா சமீபத்தில் சஞ்சீவ் - ஆல்யா மானஸா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து தற்போது ரியல் லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரபல சின்னத்திரை ஜோடிகளான பிரஜின்-சாண்ட்ரா.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் பிரபலமான பிரஜனை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருந்த சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் பதிலளித்து இருந்தார்.

அதற்கு முக்கிய காரணமே நான் ஒரு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான். அது எங்கள் தோழி ஒருவரின் குழந்தை படுபாவிங்க அந்த கொழந்தையை எங்க குழந்தையா ஆகிட்டாங்க. அதே போல 10 வருடம் ஏன் குழந்தை பெத்துக்களனு கேக்குறாங்க என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டிருந்தார். இப்படி பிரஜன் - மற்றும் சான்றா தம்பதிகள் சங்கடத்தை சந்தித்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சான்ட்ராவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு பிரஜின் தனது ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு என் மகள்கள் இருவரும் வளர்ந்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full