நான் உள்ள போனால் கம்ருதினுக்கு கெட்ட நேரம் - கோபத்தில் கொந்தளித்த பிக் பாஸ் பிரஜன்

By subhashini · 3/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 90 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 9:

இந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருக்கிறார்.
பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பார்வதி- கம்ருதீன் செய்திருக்கும் செயல்தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது.

கார் டாஸ்க்:

இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் பிக் பாஸ் போட்டியாளரும் ஆன பிரஜன் அளித்த பேட்டியில், நான் ஏன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியேன் என்று இன்னுமே எனக்கு புரியவில்லை. நல்ல விஷயங்கள் செய்ததால் தான் என்னுடைய பெயர் இன்னும் பேசப்படுகிறது. கார் டாஸ்க்கில் சான்ட்ராவுக்கு நடந்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய மனைவியை காரில் இருந்து தள்ளியதை பார்த்ததுமே ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்த தகவல் வெளியில் இருந்து தான் எனக்கும் தெரிந்தது.

https://www.youtube.com/watch?v=JfylzfjzP40

ப்ரஜன் பேட்டி:

பிக் பாஸ் ஒப்பந்தத்தில் இருந்ததால் உடனே என்னால் பேச முடியவில்லை. நிகழ்ச்சி குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது சான்ட்ரா நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அங்கு நடந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடந்திருக்கக் கூடாது. என்ன பேச வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது போட்டியாளர்களுக்கு சுய அறிவு இருக்க வேண்டும். கம்ருதீன்- பார்வதி தவறு செய்திருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை இந்த வாரமே வழங்க வேண்டும். மீண்டும் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறேன். அப்பொழுது கம்ருதீன் உள்ளே இருந்தால் அது அவருக்கு கெட்ட நேரம். இல்லை என்றால் அது நல்ல நேரம் என்று எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full