தியானம் மாதிரி தெரியவில்லை, ஏதோ நாடகம் மாதிரி இருக்கு - பிரதமர் மோடியை வம்பிழுத்த பிரகாஷ்ராஜ்

By subhashini · 1/6/2024

தியானம் மாதிரி தெரியவில்லை என்று மோடியை விமர்சித்து பிரகாஷ்ராஜ் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருக்கிறார். இது இவருடைய தனிப்பட்ட பயணம் என்று கூறியிருந்தார். அந்த வகையில் நேற்று ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தந்திருக்கிறார்.

அதன் பின் இவர் கடற்கரையில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அதனுடைய கட்டிடக்கலை எல்லாம் கண்டு ரசித்திருக்கிறார். அதற்குப் பிறகு இவர் கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு படகின் மூலம் சென்றிருந்தார். அங்கு விவேகானந்தர் பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு தியான மண்டபத்தில் தியானம் செய்திருந்தார் மோடி. இன்று மதியம் மூன்று மணி வரை இவர் தியானம் மண்டபத்தில் தியானம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

தியானத்தில் மோடி:

மேலும், மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருக்கிறது. அதோட நேற்றிலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. செல்போன்கள், உடமைகள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக அவரின் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வெளியாகியிருந்தது.

பிரகாஷ் ராஜ் பதிவு:

இதற்கு சிலர் விமர்சித்தாலும் சிலர் வரவேற்று வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், நௌதாங்கி…மெடிடேஷனா? அல்லது மீடியா அடென்ஸனா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதோடு இதில் நௌதாங்கி என்பது வட இந்தியாவில் மிக பிரபலமான நாட்டுப்புற இசை நாடகம். குறிப்பாக, பாலிவுட் சினிமா வருவதற்கு முன்பு வட இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் நௌதாங்கி தான் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ்ராஜ் குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள், கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார்.

பிரகாஷ்ராஜ் அரசியல்:

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும், அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full