பாராளுமன்றத்தில் பிரதமர் 400 இடங்கள் இருக்கு என்று பேசியதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்து பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார்.

Advertisement

அரசியலில் பிரகாஷ் ராஜ்:

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. இருந்தாலும், பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

மோடி குறித்து சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சிக்மங்களூர் பிரஸ் கிளப்பில் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், 420(மோசடி) செய்தவர்கள் மட்டுமே தேர்தலில் 400 இடங்களை பிடிப்பதை பற்றி பேசி இருக்கிறார்கள். இதுவே, காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகள் எதுவாக இருந்தாலும் இப்படி சொல்லி இருந்தால் அது அவர்களின் ஆணவத்தை காண்பிக்கும். மக்கள் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே நீங்கள் உங்களுடைய தொகுதியில் வெற்றி பெற முடியும்.

Advertisement

கார்கே குறித்து சொன்னது:

நாங்கள் இத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எந்த ஒரு கட்சியும் சொல்ல முடியாது. ஆனால், இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய ஆணவம் என்று கூறி இருந்தார். இப்படி பிரகாஷ்ராஜ் கூறியதற்கு காரணம், ஒரு கூட்டத்தில் கார்கே, பாஜக தான் தற்போது அதிக மெஜாரிட்டியுடன் இருக்கிறது. கண்டிப்பாக, மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களை பிடிக்கும் என்று கூறி இருந்தார். இதை அடுத்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி, எங்களுடைய ஆட்சி மூன்றாவது தடவை அமைய இருக்கிறது.

Advertisement

பிரதமர் மோடி கருத்து:

இது அமைய வெகு தூரத்தில் உள்ளது. அதிகபட்சமாக 100 முதல் 125 நாட்கள் தான் இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் 400 இடங்கள் என சொல்கின்றது. மல்லிகார்ஜுன கார்கே கூட இதைதான் சொல்கிறார் என்று கூறியிருந்தார். இதனால்தான் பிரகாஷ்ராஜ் அவர்கள் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். மேலும், மல்லிகார்ஜுன கார்கே இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருக்கிறார். இவர் பலமுறை தேர்தல்களில் வெற்றி கண்டு இருக்கிறார்.

Advertisement