அவர நம்பியா இந்த நாட்டை கொடுக்க போறீங்க- விஜயை தாக்கி பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்

By subhashini · 6/5/2025

விஜயின் அரசியல் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

விஜய் ஜனநாயகன் படம்:

அதோடு இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பின் இவர் தன் கட்சியின் கொடி, பாடல், உறுதிமொழி, கொள்கை எல்லாம் அறிவித்து இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார்.

விஜய் அரசியல்:

இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். தற்போது விஜய் அவர்கள் தன்னுடைய கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கோவை, மதுரை எல்லாம் சென்று இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவரை குறித்து பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=KuRn4olprxk

பிரகாஷ் ராஜ் பேட்டி:

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் குறித்து அளித்த பேட்டியில் நடிகர் பிரகாஷ் ராஜ், விஜயினுடைய அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் பிரபலமான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னுடைய மகன் மிகப்பெரிய ஸ்டார் ஆகுவதற்கு முன்பே நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். விஜய் அரசியலுக்கு புதிதானவர். அவரை எனக்கு தெரிந்தவரையில் நாங்கள் அரசியலைப் பற்றி தீவிரமாக பேசியது கிடையாது. தனக்கு இருக்கும் பிரபலத்தின் காரணமாக தான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். பவன் கல்யாணும் அப்படிதான். விஜய்க்கோ, பவன் கல்யாணுக்கோ நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி தெளிவான பார்வை கிடையாது, புரிதலும் இல்லை.

https://www.youtube.com/watch?v=csOYNpUI1JI

விஜய் அரசியல் பற்றி சொன்னது:

பவன் தன்னுடைய கட்சியை துவங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் ஒரு நிலைப்பாட்டில் தெளிவாக இருந்ததே கிடையாது. அதேபோல் விஜய் இடமும் அரசியல் குறித்து தெளிவான பார்வை இல்லை. விஜயோ, பவன் கல்யாணோ தேர்தலில் ஒரு சில இடங்களை பெறலாம். ஆனால், அதற்குப் பிறகு தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும்போது சினிமா வசனங்களை கேட்பது போல தான் இருக்கிறது. அவருக்கு ஆழமான புரிதல் இல்லை. இவரை நம்பியா இந்த நாட்டின் தலை விதியை ஒப்படைப்பது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full