இந்த இந்து முறைகளை எல்லாம் கிண்டல் செய்தார்கள்.லிஸ்ட் போட்ட பிரணிதா. ஆனால், இது என்ன பழக்கம்?

By Rajkumar · 21/3/2020

கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். உலக மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்நிலையில் பிரபல நடிகை ப்ரணிதா அவர்கள் இந்த கொரோனா வைரஸ் குறித்து கூறிய கருத்து சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. பின் இவர் சகுனி, மாசு, எனக்கு வாய்த்த அடிமைகள் என சில படங்களில் நடித்து இருந்தார். பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பிற மொழிகளுக்கு சென்றார். இவர் தற்போது கன்னட மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

https://twitter.com/pranitasubhash/status/1240138298527490048

இந்நிலையில் நடிகை பிரணிதா அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து சொன்ன கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறியது, இந்து மதத்தை பார்த்து சிரித்தார்கள். ஆனால், இன்று சிந்திக்கிறார்கள். கைகூப்பி கும்பிட்டு மற்றவர்களுக்கு வணக்கம் சொல்வார்கள். அதைத் தான் இப்போது செய்கின்றோம். சைவ உணவு சாப்பிடுவதையும், யோகா செய்வதையம், இறந்தவர்களை எரித்தவர்களையும் பார்த்து சிரித்தார்கள்.

இப்படி இந்து மதக் கலாச்சாரங்களை பார்த்து சிரித்தார்கள். ஆனால், உலகமே என்று இதைத் தான் செய்து வருகின்றது. முன்னால் சிரித்தவர்கள் எல்லாம் தற்போது சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பழக்கம் தான் தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என பிரணிதா கூறியுள்ளார். இப்படி இவர் சொன்ன கருத்துத்தை ஒரு சில பேர் பாராட்டியும், ஒரு சில பேர் விமர்சித்தும் வருகின்றனர். ஆனால், ஒரு சில இந்து அமைப்பினரோ மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று கோமியம் குடித்தார்கள் என்பது குறிபிடத்தக்கது. அதை என்ன சொல்லுவது என்று தான் புரியவில்லை.

https://twitter.com/AndrewGiggs90/status/1240185885158592512

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் முடிந்தவரை இந்தியர்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்றும் இந்த நோய் பரவலை தடுத்தாலே நம்மால் இந்த வைரஸ் தாக்குதலை சமாளித்து விட முடியும் என்றும் மக்களுக்கு கூறியுள்ளார். இந்தியா முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full