கணவர் பிறந்தநாளில் முதல் குழந்தை, மகள் பிறந்தநாளில் இரண்டாம் குழந்தை அறிவித்த நடிகைக்கு பிறந்த இரண்டாம் குழந்தை
ஏற்கனவே மகள் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் கார்த்தி, சூர்யா பட நடிகை பிரணிதா சுபாஷ். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பிரனீதா சுபாஷ். கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார்.
மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக பிரனீதா சுபாஷ் நடித்து இருந்தார். இவருக்கு அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர வேறு எந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
பிரணிதா சுபாஷ் திரைப்பயணம்:
பின் தமிழில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரனீதா சுபாஷ் அவர்கள் கன்னடம், தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்ல தற்போது ஹிந்தியில் வெளியாக இருக்கும் புஜ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரனீதா சுபாஷ் அறிமுகமாக இருக்கிறார். இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்திருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். பின் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பிரணிதாவின் முதல் குழந்தை :
இப்படி ஒரு நிலையில் திருமணம் முடித்த அடுத்த ஆண்டே தனது கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்து இருந்தார். அதில் என் கணவரின் 34வது பிறந்த நாளில் கடவுள் எங்களுக்கு தந்த வரம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது.
மீண்டும் தாயான பிரணிதா :
இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து இருந்தார் ப்ரணிதா. இப்படி ஒரு நிலையில் நெற்றி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரணிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரணிதா தெரிவித்த நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்