சினேகாவுக்கு பல வருஷமா இப்படியொரு பிரச்சனை இருக்கா? உண்மையை உடைத்த நடிகர் பிரசன்னா

By subhashini · 13/3/2025

நடிகை சினேகாவிற்கு இருக்கும் பிரச்சனை குறித்து அவருடைய கணவர் பிரசன்னா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாக்யராஜ்-பூர்ணிமா, ரஜினி – லதா, அஜித் -ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா- பிரசன்னா ஜோடி.

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் பல வருடமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சினேகா. இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும்.

சினேகா – பிரசன்னா ஜோடி :

தற்போது இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியில் நடுவராகவும், படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை சினேகா அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி இருந்த டிராகன் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

காதல் To கல்யாணம் :

தற்போது சினேகா சினிமா, நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருக்கிறார். அதோடு நடிகை சினேகா அவர்கள் நடிப்பில் மட்டும் இல்லாமல் சினேகாலயா என்ற புடவை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடை மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது விகான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கிறார்கள்.

பிரசன்னா பேட்டி:

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமான நடிகர் பிரசன்னா தற்போது மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஏற்கனவே சினேகா- பிரசன்னா இருவரும் ஜோடியாக கொடுத்த பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சினேகா, எனக்கு ஓசிடி பிரச்சனை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உடனே பிரசன்னா, ஆமாம் வீட்டையே மூன்று முறை மாற்றி இருக்கிறோம். அதேபோல் அவங்க மாத்தாமல் இருக்கும் ஒரே விஷயம் என்றால் அது நான் தான் என்று கிண்டலாக கூறி இருக்கிறார்.

சினேகா சொன்னது:

அதன் பின் பேசிய சினேகா, எனக்கு எப்போதுமே வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் கிச்சன் கிளீனாக இருக்கணும் என்று எதிர்பார்ப்பேன். இந்த ஓசிடி பிரச்சனை அரிதான பிரச்சனையாக இருந்தாலும் பெரிதாக பயப்படத் தேவையில்லை. எல்லா விஷயமும் சுத்தமாக இருக்க வேண்டும். சரியாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த பிரச்சனை உள்ளவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full