இது நடந்த அடுத்த மாசமே கல்யாணம் தான் - பிரசாந்தின் மறுமணம் குறித்து அறிவித்த அவரின் தந்தை. காதல் திருமணமா ?

By Rajkumar · 21/3/2022

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது. படிப்படியாக இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் இடம் தெரியாமல் காணாமல் போனர் நடிகர் பிரசாந்த்.

விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமலே போனார். அதே கதைகள் சரியாக இல்லாமல், உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது அளவுக்கு பிரசாந்த் மாறினார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

முதல் மனைவியால் நொந்து போன பிரசாந்த் :

நடிகர் பிரஷாந்திற்கு சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவரது திருமண வாழ்க்கை தான். நடிகர் பிரசாந்த்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்கிற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமனாகி சில ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரஷாந்த், ஆனால், நடிகர் பிரஷாந்த்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டதும் பின்னர் தெரிய வந்துள்ளது.

முதல் மனைவி விவாகரத்து :

மேலும், கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூட சில சர்ச்சை எழுந்தது.கிரகலட்சுமி பற்றி தெரிய வந்ததும் இவர்கள் இருவருக்குள்ளும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது. இதனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால், நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

பிரசாந்தின் மறுமணம் :

ஒருவழியாக இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரஷாந்த். ஆனால், திருமணத்திற்கு பின்னர் நடிகர் பிரசாந்தால் ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்கமுடியவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது உடல் எடையை எல்லாம் குறைத்து மீண்டும் 'அந்தாதுன்' மூலம் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரசாந்த். இந்த நிலையில் பிரஷாந்திற்கு இந்த ஆண்டே இரண்டாம் திருமணம் நடைபெற இருக்கிறது.

வீடியோவில் 11 நிமிடத்தில் பார்க்கவும் :

https://www.youtube.com/watch?v=_s1MlYh579k

உறுதி செய்த தியாகராஜன் :

சமீபத்தில் பிரசாந்த்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பிரசாந்தின் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் 'இந்த படம் (அந்தாதுன்) வெளியான அடுத்த மாதமே அவருக்கு கல்யாணம் தான். இது காதல் திருமணம் எல்லாம் இல்லை பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் தான் ' கூறியுள்ளார். எனவே, இந்த ஆண்டு பிரஷாந்திற்கு சினிமா வாழ்க்கையும் நிஜ வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்று வாழ்த்துவோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full