விஜய் மட்டும் அரசியலுக்கு வந்தால் திராவிட கழகங்களின் வாக்கு வங்கிகள் எல்லாம் - பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்

By subhashini · 25/2/2024

விஜயின் புதிய கட்சி குறித்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் புது கட்சி குறித்த அப்டேட் தான் வைரலாகி வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது.

மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

தமிழக வெற்றி கழகம் :

பின் அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், விஜய் அவர்கள் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் உத்தரவின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து இருந்தார்கள். இந்த கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது.

புது செயலி குறித்த தகவல்:

அதுக்காக சிறப்பு செயலி உருவாக்கப்படும் என்றும் அடுத்த வாரம் முதல் அந்த செயலி செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டம், மாநகர், நகரம், பேரூர், ஒன்றிய ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற இருக்கிறது. பின் கட்சியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் குறித்தும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் பேட்டி:

மேலும், இந்த சிறப்பு செயலியில் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், போன் நம்பர் ஆகியவற்றை இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினராக சேரலாம் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை அடுத்து தன்னுடைய அரசியல் பயணத்திற்கு ஆலோசனை வழங்க பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேட்டியில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது, நடிகர் விஜய் என்னை இதுவரை அரசியல் ஆலோசனைக்காக சந்திக்கவில்லை.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

விஜய் உதவி கேட்டால் கண்டிப்பாக செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அறிவுரை கொடுப்பேன். அதோடு நடிகர் விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசராக இருக்க மாட்டேன். மேலும், தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியை எந்த கட்சியாலும் இதுவரை உடைக்க முடியவில்லை. இதனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறைவாக மதிப்பிடுவது தவறு. திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியை 60 சதவீதத்துக்கு கீழ் குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full