தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய பிரசாந்த் - கனவு நயாகனை கண்டு கண்ணம் சிவந்த 80ஸ் ரசிகைகள்.

By subhashini · 3/1/2024

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் பிரசாந்த் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் முழுவதுமே தமிழகத்தில் மிக்ஸாம் புயல் காரணமாக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். குறிப்பாக, மிக்ஸாம் புயலால் சென்னை பகுதியில் இதுவரை வரலாறு காணாத மழை பெய்து வெள்ளத்தால் எல்லா பகுதியும் நீரினால் மூழ்கியிருந்தது.

உணவு, உடை, தங்கயிடம் இல்லாமல் மக்கள் மிகவும் அவஸ்தை பட்டு இருந்தார்கள். மேலும், அரசாங்கம், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து மக்களை மீட்டெடுத்தார்கள். இதனிடைய மீட்பு பணிகளை வைத்து அரசாங்கம் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்ல முயற்சித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் கடந்த 17ஆம் தேதி முதல் கனமழை பெய்திருக்கிறது.

நடிகர் பிரசாந்த் செய்த உதவி:

இதனால் அப்பகுதி மக்களும் அவஸ்தை பட்டு இருக்கிறார்கள். இதற்கு சமீபத்தில் தான் விஜய் அவர்கள் தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து நல உதவிகளை செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் பிரசாந்த்தும் தூத்துக்குடி ஏ ஆர் எஸ் மஹாலில் வைத்து நல திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி, உடைகள் போன்ற நல திட்டங்கள் வழங்கி இருக்கிறார்.

https://twitter.com/NewsTamilTV24x7/status/1742505822268309758

நடிகர் பிரசாந்த் அளித்த பேட்டி:

இதை அடுத்து நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார். இதுபோன்று எல்லோருமே உதவி செய்வார்கள். இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உட்பட பல அதிகாரிகள் தங்களுடைய குடும்பங்களை எல்லாம் விட்டு சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நம்முடைய நாடு மிகப் பெரிய நாடு.

பிரசாந்த் சொன்ன அறிவுரை:

இதனால் அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளங்களை தூர்வார வேண்டும். ஒவ்வொரு பேரிடர் காலத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இனிமேல் இது போல் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படி போட்டி போட்டு கொண்டு நடிகர் விஜய்- பிரசாந்த் இருவருமே தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவி திட்டங்கள் செய்திருப்பது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/ZeeTamilNews/status/1742523367742427213

விஜய்- பிரசாந்த் நடிக்கும் படம்:

அது மட்டும் இல்லாமல் விஜய் மற்றும் பிரசாந்த் இருவரும் இணைந்து கோட் the greatest of all time என்ற படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சினேகா, பிரசன்னா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்த நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு கோட்(GOAT) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full