பிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம்.! கமன்ட் செய்த பாண்டா.! ஆபாச பதிலளித்த பிரியா ஆனந்த் ?

By Rajkumar · 24/8/2019

நடிகர் ஜெய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த "வாமனன்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிட்சியமானவர் தான்.

https://twitter.com/PriyaAnand/status/1164887152766754816

இறுதியாக ஆர் ஜே பாலாஜி நடித்த 'எல் கே ஜி' படத்தில் நடித்திருந்தார். நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை.

எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார். இப்படி ஒரு சர்ச்சையில் பிரியா ஆனந்த் சிக்கிய நிலையில் தற்போது அம்மணிக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லை. இருப்பினும் சுமோ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய ப்ரியா ஆனந்தின் புகைப்படத்தை கண்டு பிரபல யூடுயூப் விமர்சகர் பாண்டா எனப்படும் பிரசாந்த் ட்வீட் செய்திருந்தார். அதற்கு பிரியா ஆனந்த், பாண்டா என்று பதிவிட்டதோடு பூ என்ற ஸ்மைலி ஒன்றையும் பதிவிட்டார். இதனை வேறு விதமாக எடுத்துக்கொண்ட ரசிகர்கள் பிரியா ஆனந்த் பாண்டாவை ஆபாச வார்த்தைகளில் திட்டிவிட்டார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full