ப்ளூ சட்ட மேல கேஸ் போறேன்,ரஜினி வந்ததும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும்- காட்டமாக பேசிய காந்த் நடிகர்.

By Dhilip Kumar · 19/8/2023

ஜெயிலர் திரைபடத்தை விமர்சித்த ப்ளு சட்டை மாறன் மீது வழக்கு அளிக்க உள்ளேன் என்று கூறிய இயக்குனர் பிரவீன் காந்தி.விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ விமர்சனம் மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.

நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் வெளியாகும் கொடுத்து இருக்கிறது.

ஜெயிலர் திரைப்படம்:

அந்த வகையில் தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வந்தனர்.

இயக்குனர் பிரவீன் காந்தி:

ப்ளூ சட்டை மாறனை பற்றி பேசிய அவர் “ தமிழ் சினிமாவில் முதல் நசுக்கப்பட வேண்டிய நச்சு பாம்பு அவர். அவரும் ஒரு படம் எடுத்துள்ளார் அந்த படத்தின் வெளியிடும் போது எவ்வாறு ஓடினார். ஆண்டி இந்தியன் என்று படம் எடுத்த அவர் சினிமாவின் ஆண்டி நபர் அவர். இது வரை 50 லட்சம் ஜெயிலர் திரைபடத்தை பார்த்து இருப்பார்கள் அந்த 50 லட்சம் பேர் சார்பாக நன் அவர் மீது வழக்கு பதிவு செய்யபோகிறேன்.

என்ன வழக்கு என்றால் இந்த 50 லட்சம் பேர் அவரின் பேச்சை கேட்டு அந்த திரைபடத்தை பார்க்காமல் இருந்தால் அந்த 50 லட்சம் பேரும் நல்ல பொழுது போக்கை காணமல் போகி இருப்பர்கள். அதனால் நீ பாவியாகி இருப்பாய். தற்போது அனைவரும் அந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். அது போல் நீ எத்தனை படங்களை கெடுத்து இருப்பாய். உன்னால் ரஜினி சார் உடைய படத்தை கெடுக்க முடியவில்லை. ஏனென்றால் உங்க அப்பா தாத்தா எல்லாம் அவருக்கு விசில் அடித்து இருப்பார்கள். இதே நிலையல் சாதாரண நடிகர் இந்த படத்தில் நடித்து இருந்தால் அது ப்ளூ சட்டை மாறனின் பேச்சை கேட்டு அது தோல்வி படமாக அமைந்து இருக்கும்.

இந்த படம் தோற்று இருந்தால் 50 லட்சம் பேரின் சந்தோஷத்தை கெடுத்து இருப்பாய் நீ. உன்னை தூக்கி கொண்டு வந்து என்ன வேண்டுமாலும் செய்யலாம். ப்ளூ சட்டை மாறன் தண்டிக்கபட வேண்டிய நபர் இவரால் பல தயாரிப்பாளர்கள் வாழ்க்கையை கேடுத்தாரோ அவர்கள் அனைவரும் அவரிடம் நஷ்ட ஈடு வாங்க வேண்டும். இனி அவர் எந்த திரைப்படத்தையும் விமர்சனம் செய்ய கூடாது. நான் இதை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சொல்லி சன் டி.வி யுடன் இணைந்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய போகிறேன். தயவு சேர்ந்து இனி அவர் எந்த திரைப்படத்தையும் இவ்வளவு வன்மமாக விமர்சனம் செய்யக் கூடாது.இந்த பாவங்களை கழிக்க இவர் ரஜினியின் சார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் கூறினார்.                      

Tamil Behind Talkies AMP · Quick view
View full