பிக் பாஸ் வீட்டின் பெண் போட்டியாளருக்கு கர்ப பரிசோதனை.! ரசிகர்கள் ஷாக்.!

By Rajkumar · 31/7/2019

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே இந்தி,மலையாளம், தெலுகு என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அணைத்து மொழி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டால்க் ஆப் தி டௌனாக மாறியுள்ளது.

தமிழில் இரண்டு சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று துவங்க இருக்கிறது. இதில் தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என் டி ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள்.

தற்போது தெலுங்கு பிக் பாஸின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. . இந்த சீசனை பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெளியேறிய முதல் போட்டியாளரான ஹேமா போட்டியாளருக்கு கர்ப சோதனை நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் பிரபல நடிகையான ஹேமா, தெலுங்கில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஹேமாவிற்கு பிக் பாஸ் குழு கர்ப பரிசோதனையை நடத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சர்ச்சையும் எழக் கூடாது என்பதற்காகவும் தேவை இல்லாத நெருக்கடியை தவிர்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full