8 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை திடீர் மரணம் - குழந்தையின் நிலை என்ன?

By subhashini · 2/11/2023

நிறை மாத கர்ப்பிணியான மலையாள சீரியல் நடிகை திடீரென்று இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கருத்த முத்து என்ற மலையாள தொடரின் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா. இவர் மருத்துவ படிப்பை முடித்திருக்கிறார். இருந்தாலும், சினிமாவின் மீது இருந்த ஆசையினால் படங்களில் நடித்தார். பின் இவர் சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதற்குப் பின் இவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் திருவனந்தபுரம் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நடிகை பிரியா உயிரிழந்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரியாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் ப்ரியா இறந்து இருக்கிறார்.

ப்ரியா இறப்பு:

அதோடு இவருக்கு வேறு எந்த உடல் உபாதைகளும் இல்லை. தற்போது ப்ரியாவுக்கு 35 வயது தான் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு கொடுமையான சம்பவம் என்னவென்றால் இறக்கும்போது பிரியா கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இது இவருக்கு முதல் குழந்தை. இவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். இன்னும் சில வாரங்களில் குழந்தையை பெற்றெடுக்கும் சந்தோசத்தில் ப்ரியா இருந்தார்.

ப்ரியா குழந்தை நிலை:

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று ப்ரியா இறந்தது பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பிரியாவின் குழந்தையை எடுக்க தீவிர சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் கேரளாவில் சீரியல் நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்டிருந்தார். மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரெஞ்சுஷா மேனன்.

ரெஞ்சுஷா மேனன் குறித்த தகவல்:

இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்திருக்கிறார். பின் சில தினங்களுக்கு முன் தன்னுடைய பிறந்தநாள் அன்றே ரெஞ்சுஷா மேனன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருக்கிறார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெஞ்சுஷா உடலை பிரத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். பின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ரெஞ்சுஷா மேனன் தற்கொலை:

மேலும், ரெஞ்சுஷா மேனன் தற்கொலைக்கு காரணம் தான் தெரியவில்லை. சில செய்திகள் அவர் இறக்கும் போது நிதி பிரச்சனையில் இருந்ததாக கூறுகின்றன. பிறந்த நாளிலேயே நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இந்த சம்பவம் மறைவதற்குள்ளேயே நடிகை பிரியாவின் இழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full