'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' - சினிமா நடிகையை மணமுடித்த விஜய் டிவி சீரியல் நாயகன்.

By subhashini · 25/1/2024

விஜய் டிவி சீரியல் நடிகர் சினிமா ஹீரோயினியை கரம் பிடித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக சின்னத்திரை, வெள்ளி வெள்ளித்திரையில் பிரபலங்கள் தங்களுடன் ஜோடியாக நடித்தவர்களையே திருமணம் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அதிலும் சமீப காலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் பலர் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா, சேத்தன்- தேவதர்ஷினி, ஆலியா மானசா- சஞ்சீவ், சித்து- ஸ்ரேயா, மதன்- ரேஷ்மா, ஆர்யன்- ஷபானா போன்ற பல பேர் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் தான் நடிகர் பிரேம் ஜேக்கப். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நீ நான் காதல் சீரியல் நடிகர்:

இந்த தொடர் சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலுக்கு முன் பிரேம் அவர்கள் மலையாளத்தில் ஏராளமான சீரியல்கள் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். தற்போது நீ நான் காதல் என்ற தொடரின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பிரேம் ஜேக்கப் காதல்:

இந்த நிலையில் இந்தத் தொடரின் ஹீரோ பிரேம் ஜேக்கப்க்கு திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேம் அவர்கள் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்வாசிகா என்பவரை தான் காதலித்து வந்தார். இவர் தமிழில் வைகை என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.

ப்ரோம்-ஸ்வாசிகா திருமணம்:

அதற்கு பின் இவர் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளத்திலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் பிரேம் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்வாசிகாவுக்கு கிடைத்தது. அப்போதிலிருந்து தான் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இவர்கள் இருவருமே சில வருடமாக காதலித்து வந்தார்கள். பின் ஒரு வழியாக பெற்ற இரு வீட்டாரிடமும் இவர்கள் சம்பந்தம் வாங்கி விட்டார்கள்.

பிரபலங்கள் வாழ்த்து:

இன்று இவர்களுடைய திருமணம் கேரளாவில் நடைபெற்றிருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full