விஜய் கட்சி மாநாடு நாளில் தே.மு.தி.க மாநாட்டின் பழைய வீடியோவை பகிர்ந்த பிரேமலதா

By Rajkumar · 27/10/2024

தவெக மாநாடு நடைபெறும் நாளில் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக மாநாட்டின் வீடியோவை பகிர்ந்திருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக தவெக கட்சியின் முதல் மாநாடு குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.

அதோடு வருகின்ற 2006 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார். விஜய் தன்னுடைய கட்சி கொடியை ஏற்றுவதற்கு முன் உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார்.

தவெக முதல் மாநாடு:

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் இன்று அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடுத்த தலைவர் விஜய் திட்டமிட்டு, அதற்கான அறிக்கையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டுக்காக ஏற்பாடு பணிகளை ஒரு மதத்திற்கும் மேலாக தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு குறித்த தகவல்:

மேலும், இன்று மாலை 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையில் இந்த அரசியல் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் முழுக்க முழுக்க கட்சிக் கொள்கைகளை குறித்து விஜய்யின் அரசியல் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளது. மேலும், விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் என்று அனைவரும் மாநாட்டிற்கு வருபவர்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கின்றனர்.

பிரேமலதா விஜயகாந்த் பதிவு:

இந்நிலையில், விஜய் கட்சி மாநாடு நடக்கும் இந்த நாளில், தேமுதிக மாநாட்டின் பழைய வீடியோவை பிரேமலதா பகிர்ந்துள்ளார். மேலும் அதில், இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில், 2.5 லட்சம் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து:

பிரேமலதாவின் இந்த பதிவை பார்த்து இணையவாசிகள், 'அதை யாரும் மறக்கவில்லை, கேப்டன் தான் கெத்து, இப்போ உங்க பிரச்சனை என்ன? ', 'கேப்டன் இருந்திருந்தால் முதல் ஆளா விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருப்பார். ஆனா நீங்க வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, கேப்டன் பெயரை கெடுக்காதீங்க', 'கேப்டன் தங்கம் தான் ஒத்துக்கிறோம், விஜய் அண்ணன் வைரம்' என்று பிரேமலதாவின் பதிவிற்கு கமெண்டுகள் போட்டு வருகிறார்கள். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full