விஜயகாந்தின் தற்போதைய உடல் நிலை என்ன? உண்மை நிலவரத்தை சொல்லி வீடியோ வெளியிட்ட பிரேமலதா

By Rajkumar · 30/11/2023

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக இருந்த விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

தற்போது தொடர் சிகிச்சை எல்லோரும் விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று வருகிறார் அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியா மருத்துவமனையில் விஜயகாந்த்திற்கு கடந்த சில நாட்களாக நாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

மேலும், இது வழக்கமான பரிசோதனை தான் என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தே.மு.தி.க சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இருப்பினும் விஜயகாந்த் வீடு திரும்பாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

https://www.youtube.com/watch?v=7c3tjWD8yWY

இப்படி ஒரு நிலையில் விஜயகாந்தின் உடல் நிலையில் தொடர்பாக மியாட் மருத்துவமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ' விஜயகாந்த் சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது இப்படி ஒரு நிலையில் 'விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என தெரிவித்து இருந்தது. இதனால் விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த சோகத்தில் ஆலந்தனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள அவர் ' இன்று காலை மருத்துவமனை அறிக்கை வழக்கமான அறிக்கைதான். இதைப் பற்றி பயப்பட வேண்டிய தேவை இல்லை. கேப்டன் நலமுடன் உள்ளார். மருத்துவமனை, செவிலியர் மற்றும் நானும் அவரை நலமுடன் பார்த்துக் கொள்கிறோம். அவர் வெகுவிரைவில் வீடு திரும்பி உங்களை சந்திப்பார். அவர் செய்த தர்மமும், அத்தனை பேரின் பிரார்த்தனையும் நிச்சயம் தலைவரை காப்பாற்றும். எனவே கடைக்கோடி தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டும். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார். அது எப்போது என்பதை நாங்கள் தெரிவிப்போம்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full