கூட்டத்தில் சிக்கி தவித்த ப்ரேமலு பட நடிகை, கண்ட இடத்தில் கை வைத்த ரசிகர்கள் - கொந்தளிப்பில் மமிதா பைஜு

By subhashini · 3/6/2024

கடைதிறப்பு விழா கூட்டத்தில் பிரேமலு பட நடிகை சிக்கி தவித்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள மொழி படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மமிதா பைஜு. இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சமீபத்தில் வெளிவந்த பிரேமலு என்ற படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மமிதா பைஜு. இதை அடுத்து இவர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் படத்தில் கமிட்டாகி இருந்தார். ஆனால், திடீரென்று இந்த படத்திலிருந்து சூர்யா வெளியானதுமே மம்தா வெளியேறிவிட்டார்.

மமிதா பைஜு குறித்த தகவல்:

இதற்கு காரணம், பாலா தன்னை அடித்து விட்டதால் தான் மமிதா பைஜு படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பேட்டியில் மம்தா, நான் நிறைய விஷயங்களை சொல்லி இருந்தேன். ஆனால், எடிட் செய்து வீடியோ போட்டிருக்கிறார்கள். பாலா எனக்கு ஒரு நல்ல குரு. அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். தேவையில்லாமல் பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.

மமிதா பைஜு நடிக்கும் படம்:

சமீபத்தில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருந்த rebel படத்தில் மம்தா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. மேலும், பிரேமலு படத்தின் வெற்றிக்கு பிறகு ப்ரேமலு 2 படத்திலும் மமிதா பைஜு நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தமிழிலும் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மம்தா பைஜி கமிட் ஆகி இருக்கிறார்.

மமிதா பைஜி வீடியோ:

இந்த படத்தை கீர்த்திஸ்வரன் என்பவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தை மைத்திரி மூவிஸ் தயாரிக்கிறது.
இதைத் தொடர்ந்து இவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால், தற்போது தென்னிந்திய திரை உலகில் இளைஞர்களின் கிரஷ்ஷாக மம்தா பைஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடை திறப்பு விழாவில் மமிதா பைஜி நடந்திருக்கும் மோசமான சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திறப்பு விழாவில் நடந்தது:

அதாவது, சென்னையில் உள்ள வி ஆர் மாலின் திறப்பு விழாவிற்காக மமிதா பைஜி சென்றிருக்கிறார். ஆனால், அங்கு நிறுவனத்தின் நிர்வாகிகள் சரியாக பாதுகாப்பு கொடுக்காததால் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் மமிதா பைஜி சிக்கி தவித்திருக்கிறார். வழக்கம் போல் இதை பயன்படுத்திக் கொண்ட சில மோசமான நபர்கள் மமிதா மீது கண்ட இடத்தில் கை வைத்து இருக்கிறார்கள். இதனால் இவர் ரொம்பவே தர்மசங்கடத்திற்கு ஆளாகி இருக்கிறார். இருந்தும் அந்த கூட்டத்தில் இருந்து எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்று தப்பித்து வெளியே வந்தார் மமிதா தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து மலையாள ரசிகர்கள் பலரும் சென்னை இளைஞர்களை திட்டியும் கண்டித்தும் வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full