ஆல் ஸ்டேட்டில் ஹிட் அடித்த பிரேமம் பட நடிகருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் அழகான புகைப்படம் இதோ.

By Rajkumar · 9/5/2020

ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் மலையாளத்தில் தான் வெளிவந்தது. தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்றும் கூட மறக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள படம் தான் பிரேமம். இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள்.

பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம். மேலும், படத்தின் பாடல்கள், காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம். அந்த அளவிற்கு படம் மனதை வருடியது.

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவுக்கு நண்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஷராஃப் யு தீன் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் ஷராஃப் அவர்கள் நேரம், ஓம் சாந்தி ஓசானா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஷராஃப் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகள் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B_4gGXIpcLW/

அதில் அவர் தனக்கு பிறந்த பெண் குழந்தை புகைப்படத்தை பதி விட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் நடிகர் ஷராஃப் யு தீன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவருக்கு துவா என்ற மகளும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full