விஜய் முதல் விஜய் வசந்த் வரை தன் குறும்படத்தை பார்க்க சொல்லி Tag செய்துள்ள பிரதீப் - 8 ஆண்டு கழித்து வாய்ப்பு கேட்டுள்ள நடிகர்.

By Arun · 17/11/2022

எட்டு வருடத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் டீவீட்டுக்கு நடிகர் பிரேம்ஜி ரிப்ளை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

லவ் டுடே படம்:

காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதன் படி இருவரும் செல்போன்களை மாற்றி கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது.

படத்தின் கதை:

இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் எட்டு வருடத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் டீவீட்டுக்கு நடிகர் பிரேம்ஜி ரிப்ளை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் பழைய டீவ்ட்:

அதாவது, பிரதீப் ரங்கநாதன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு குறும்படங்களை இயக்கியிருந்தது அனைவரும் அறிந்து ஒன்று. இவர் சில ஆண்டுகளுக்கு முன் லவ் டுடே கதையா தான் ஆப் லாக் என்ற பெயரில் எடுத்திருந்தார். அந்த படத்தை பார்த்து ப்ரொமோட் செய்யும் படி பல தமிழ் சினிமா பிரபலங்களையும் ட்விட்டரில் டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரேம்ஜி பதிலும் பிரதீப்பின் ரிப்ளையும் :

அதில், நகைச்சுவை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஒருவரும் ஆவார். இந்த நிலையில் தற்போது அந்த டீவ்ட்க்கு பிரேம்ஜி, உங்கள் அடுத்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். பிரேம்ஜியின் இந்த பதிவை பார்த்த பிரதீப் 'சார், ரொம்ப நன்றி சார், இந்த பதிவை போட பெரிய மனசு வேண்டும். உங்களை நான் உங்கள் வாயால் 'என்ன கொடும சார் இது' னு சொல்ல வைக்க ஆசைப்படுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full